MENU

Show more

சேமிப்பு பட்ஜெட் வழி

சேமிப்பு பட்ஜெட் வழி


நாம் வரு­மா­னமும், வாய்ப்­பு­களும் அதிகம் உள்ள காலத்தில் வாழ்­கிறோம். இதனால் செல­வு­களும் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. இது, பட்­ஜெட்டில் துண்டு விழச் செய்­யலாம். அதிலும் மாதக் கடை­சியில் மிகுந்த திண்­டாட்­டத்தை உண­ரலாம். அதற்­காக தேவை­களை குறைத்துக் கொள்­வதும் கடினம் தான். இந்த நிலையை தவிர்க்க, நிதி விஷ­யங்­களை முன்­கூட்­டியே திட்­ட­மி­டு­வது சரி­யாக இருக்கும். இதன் மூலம், வரு­மா­னத்தை சிக்­க­லாக்கி கொள்­ளாமல், தேவை­க­ளையும் நிறை­வேற்றிக் கொள்­ளலாம். இந்த வழி கடைப்­பி­டிப்­ப­தற்கும் எளி­தாக இருக்கும்.

சேமிப்பு வழி:
மாதத்தின் முதல் பாதியில் தாரா­ள­மாக செலவு செய்து விட்டு, மாதக்­க­டை­சியில் தடு­மா­று­வதை தவிர்க்க சிறந்த வழி பட்­ஜெட்டை தலை­கீ­ழாக மாற்­று­வது தான். அதா­வது செல­வு­களை திட்­ட­மிட்­டு­விட்டு, சேமிப்­பிற்கு வரு­வ­தற்கு பதில் முதலில் சேமிப்பை தீர்­மா­னிப்­பது. நீங்கள் எவ்­வ­ளவு சேமிக்க வேண்டும் என விரும்­பு­கின்­றீரோ, அந்த தொகையை முத­லி­லேயே எடுத்து வைத்­து­விட வேண்டும். இதை தான், முதலில் உங்­க­ளுக்கு நீங்­களே சம்­பளம் கொடுப்­பது என்றும் சொல்­கின்­றனர்.

செல­வுகள் :
வரு­மா­னத்தில், 15 முதல் 25 சத­வீதம் வரை சேமிப்­புக்கு என ஒதுக்­கிய தொகையை, எதிர்­கால நல­னுக்­கான கணக்கில் வைத்­து­விட வேண்டும். அதன்பின், எஞ்­சிய தொகையில் செல­வு­களை திட்­ட­மிட வேண்டும். இதிலும் வீட்­டுக்­க­ட­னுக்­கான மாதத்­த­வணை, பில்கள், காப்­பீடு, மளிகை செல­வுகள் போன்­ற ­வற்றை முதலில் செலுத்தி விட வேண்டும். இதன் பின் மிஞ்சும் தொகையை பொழு­து­போக்கு, ஷாப்பிங், வெளியே சாப்­பி­டு­வது போன்ற தேவை­க­ளுக்கு வைத்துக் கொள்­ளலாம்.

திட்­ட­மிட்­ட­படி:
இந்த முறையை திட்­ட­மிட்­ட­படி கடைப்­பி­டிக்க வேண்டும். சேமிக்கும் தொகையை, தவ­றாமல் முத­லீடு செய்­வ­திலும், கவனம் செலுத்த வேண்டும். முதலில் சேமிப்பு கணக்கு அல்­லது தொடர் வைப்பு நிதியில் சேமித்து, பின் கணி­ச­மான தொகை சேர்ந்­ததும் நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ப, பொருத்­த­மான முத­லீட்டு வாய்ப்பை நாடலாம். எஸ்.ஐ.பி., முறை­யிலும் மியுச்­சுவல் பண்ட் திட்­டங்­களில் பங்­கேற்­கலாம். ஓய்வு கால திட்­ட­மி­ட­லையும் மறந்­து­வி­டக்­கூ­டாது.

சேமிப்பு ஏன்?
நீங்கள் குறை­வாக அல்­லது அதிகம் சம்­பா­திக்­கலாம். ஆனால் உங்கள் வரு­மா­னத்தை வைத்­துக் ­கொண்டு இன்று என்ன செய்­கி­றீர்கள் என்­பது, நாளை என்ன செய்ய முடியும் என்­பதை தீர்­மா­னிக்கும். இப்­போது சேமிக்கும் அள­வுக்கு வரு­மானம் இல்லை என சொல்­வதோ அல்­லது, இதை­விட அதிகம் சம்­பா­திக்கும் போது சேமிப்பேன் என சொல்லி தள்ளிப் போடாமல், இப்­போ­துள்ள நிலையில் சேமிக்கத் துவங்­கு­வதே சிறந்­தது. சேமிப்பு வழி பட்ஜெட் அதற்கு கைகொ­டுக்கும்!

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026