MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 12.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 மார்கழி 28♝ 12•1•2019*


🔥
🛡ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு
முடிவுக்கு வந்தது. அரசு மேலும் கால அவகாசம் கேட்டதை ஏற்க மறுத்து ஜாக்டோஜியோ 22.1.19 முதல் காலவரையற்ற  வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு. நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு.

🔥
🛡 அரசு, அரசுதவி பெறும் உயர்/மேல்நிலை பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள், அலுவலர்கள் ‘பயோ மெட்ரிக்’ முறையில் வருகைப் பதிவு உடனடியாக அமல்.
தினமும் இரண்டு முறை பதிய வேண்டும்.


🔥
🛡 அங்கன்வாடி பணியில் ஆசிரியர்கள் உத்தரவை வாங்க மறுப்பு.

🔥
🛡நாகப்பட்டிணம், வேலூர் ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று வேலைநாள்.

🔥
🛡 உபரி ஆசிரியர் கணக்கிடும்போது TET தேர்வின் மூலம் ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்களில் இளையவர் முடிவு செய்ய  TRB ரேங்க் அடிப்படையில் தான் முன்னுரிமை கணக்கிடப்படும் -  CM CELL Reply.

🔥
🛡
TNPSC : குரூப்-2 தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியீடு.

🔥
🛡 பொங்கல் பரிசு தொகை ரூ.1000 சர்க்கரை கார்டுதாரர்களுக்கும் வழங்கலாம்-உயர்நீதி மன்றம் அனுமதி.

🔥
🛡 வரும் கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க மத்திய அரசு  முடிவு.

🔥
🛡தமிழ் பல்கலைக்கழகத்தில் B.Ed படிப்பின் 2018-இன்  முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

🔥
🛡 தமிழகத்தின் பல பகுதிகளில்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மிக அதிகமான குளிர் பதிவாகியுள்ளது. பகல் நேரத்திலும், குளிர்ந்த சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் தொடர்ந்து குளிர் நிலவும்; வறண்ட வானிலை நீடிக்கும் - சென்னை வானிலை மையம் கணிப்பு.

🔥
🛡 வாட்ஸ் அப்பில் உள்ள தகவல்களை பாதுகாக்க  புதிய பாதுகாப்பு வசதியாக பயனாளர்கள் தங்களது கைரேகை மூலம் வாட்ஸப்பினை லாக் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026