MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 09.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 மார்கழி 25♝ 9•1•2019*


🔥
🛡மத்திய பாஜக அரசுக்கு எதிராக இந்தியா முழுவதும் நேற்றும் இன்றும் தொடர்கிறது 48 மணிநேர அகில இந்திய வேலைநிறுத்தம் :
அமைப்பு சாரா தொழிலாளர்களோடு வங்கி ஊழியர்கள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குடிதண்ணீர், மின்சாரம், அஞ்சல் துறை, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, நிலக்கரி, இரும்பு உற்பத்தி நிறுவனத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரும் இந்த இரு நாட்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கிறார்கள்.

🔥
🛡தமிழ்நாட்டின் 33வது மாவட்டம்  கள்ளக்குறிச்சி - சட்டப் பேரவையில் நேற்று  முதல்வர்  அறிவிப்பு.

🔥
🛡தமிழக அரசு பொங்கல் போனஸ்  அறிவிப்பு :
A & B பிரிவு -  போனஸ் இல்லை,
C & D பிரிவு -  3000,
தற்காலிக/பகுதிநேர  ஊழியர்கள் - 1000.

🔥
🛡பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு ஜனவரி 14 போகிப் பண்டிகை அன்று பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு.

🔥
🛡 CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு.


🔥
🛡CBSE பாடத்திட்ட மாணவர்களுக்கு
செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு.

🔥
🛡 மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இயக்குனர்கள் குழு நேற்றும் இன்றும்  நடத்த இருந்த 'மெகா' ஆய்வு ஒத்திவைப்பு. பொங்கலுக்கு பின் ஆய்வு நடைபெறும்.

🔥
🛡அனைத்து வகை பள்ளிகளுக்கும் (12.01.2019) சனிக்கிழமை வேலை நாள் - தஞ்சாவூர் CEO உத்தரவு.

🔥
🛡அலைபேசியில் வருகைப்பதிவை தினசரி காலையில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது - தஞ்சாவூர் CEO சுற்றறிக்கை வெளியீடு.

🔥
🛡 அங்கன்வாடி ஆசிரியர் புதிய தினசரி பாடத்திட்டம் வெளியீடு.

🔥
🛡 நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் - லோக்சபாவில்  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் பதில்.

🔥
🛡 சிறப்பாசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கலை ஆசிரியர் நலச்சங்கம் கோரிக்கை.

🔥
🛡 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதியை வரும் மே மாதம் இறுதியில் அறிவிக்க இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்.

🔥
🛡 இலவச நோட்டுகள் இதுவரை  வழங்கப்படவில்லை :  கல்வித்துறை கப்சிப் -  பத்திரிக்கை செய்தி.

🔥
🛡நாடு முழுவதும் ஒரே ஒரு ஆசிரியரை கொண்ட அரசு பள்ளிகள் சுமார் ஒரு லட்சம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணையமைச்சர் சத்யபால் சிங் இதனை தெரிவித்துள்ளார்.

🔥
🛡TNPSC Group 1 Services Exam 2019 : தமிழ்நாடு குரூப்1 தேர்வு 139 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

🔥
🛡அங்கன்வாடிகளில் பள்ளி முன்பருவ கல்விக்கான தினசரி பாடத்திட்டம்  வெளியிடப்பட்டுள்ளது.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026