MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 22.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 தை 8♝ 22•1•2019*


🔥
🛡ஜாக்டோ-ஜியோ- இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பம். இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்பு.

🔥
🛡ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு தடை இல்லை - சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு எதிராக கோகுல் என்ற மாணவன் தடைகோரிய வழக்கில் தடைவிதிக்க முடியாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

🔥
🛡ஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காக விசாரிக்க கோருகிறீர்கள்? இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது

🔥
🛡போராட்டமே தவிர்க்க இயலாததாக உள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பு கடிதம் ( 21.01.2019 )
அனுப்பப்பட்டுள்ளது.

🔥
🛡அங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட LKG மற்றும் UKG வகுப்புகள் துவக்கம்: அரசு செய்திக் குறிப்பு வெளியீடு -Dt: 21/01/19

🔥
🛡ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய
பள்ளிக்கல்வி செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு வழங்கியது.
மேலும் வழக்கை ஜன.28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

🔥
🛡ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் கீழ்
தமிழக அரசு  ஊழியர்கள், ஆசிரியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் -  போராட்டத்தை முறியடிக்க கல்வித் துறை தீவிரம் - நாளிதழ் செய்தி

🔥
🛡தஞ்சை மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு
25.01.2019 அன்று தஞ்சாவூர்  மாவட்டம் முழுவதும் விடுமுறை - ஆட்சியர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡 ஜாக்டோ -ஜியோ போராட்டம் குறித்து -தலைமை செயலாளர் கடிதம்

🔥
🛡அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. இதனால், அரசு பணிகள், பொதுத் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான எஸ்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026