MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 05.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 மார்கழி 21♝ 5•1•2019*


🔥
🛡 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை ரத்து - மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் :
இந்த திருத்த மசோதாவின்படி 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம்.

🔥
🛡 நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவடைந்த உடன் பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் - சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡 ஆசிரியர் பொது இடமாறுதல் தொடர்பாக மாவட்ட வாரியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலருக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவு.

🔥
🛡 DEE - அங்கன்வாடி மையத்துக்கு உபரியாக உள்ள  பெண் ஆசிரியர் ஒதுக்கீடு -
ஒன்றிய அளவில் இளையவரான ஒருவரையோ அல்லது அருகில் உள்ள ஒன்றியத்தில் இருந்து ஒருவரையோ ஒதுக்க இயக்குநர் பட்டியல் கேட்பு.

🔥
🛡 பள்ளிகளில்  APP மூலம் இடப்படும்  மாணவர்களின் வருகை பதிவுகளை மாவட்ட ஆய்வு அலுவலர்கள் கண்காணித்தல் சார்ந்து கூடுதல் மாநில திட்ட இயக்குனரின் செய்முறைகள்
வெளியீடு.

🔥
🛡 இடைநின்ற பதினோறாம் வகுப்பு மாணவர்களை பள்ளி வழியே பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்க தலைமையாசிரியர்களுக்கு அரசு தேர்வுகள் துறை  உத்தரவு.

🔥
🛡 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில்  கடன் பெறும் போது இனி 5% பங்குத் தொகை கட்டினால் போதும் - பதிவாளர் சுற்றறிக்கை.

🔥
🛡 TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியாற்றி வரும் 30 ஆயிரம் ஆசிரியர்களின் வேலை பறி போகும் அபாயம்.

🔥
🛡 பள்ளி வேலை நாட்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு இன்று  (05.01.2019) சனிக்கிழமை வேலை நாள் - திருவள்ளூர் CEO உத்தரவு.

🔥
🛡 10ஆம் வகுப்பு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சிக் கட்டகம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு.

🔥
🛡 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் ஓரிரு நாள்களில் முதல்வரால்  தொடங்கப்பட உள்ளது. இந்தத் தொகுப்புடன், ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைக்கு ரூ.1000-மும் சேர்த்து அளிக்கப்படுகிறது.

🔥
🛡பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை, www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில், வரும் 7 முதல் 14ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026