MENU

Show more

ஜாக்டோஜியோ அமைப்பினர் கைது...

*மாநிலம் முழுவதும் பொறுப்பாளர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்க அரசு  முயற்சி....*

⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡









*⭐காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளை விடுதலை செய்து விட்டு ஒன்றிய மாவட்ட ஆண் நிர்வாகிகளை கைது செய்ய நடவடிக்கை*


*⭐திருப்பூரில் பொறுப்பாளர்களை கைது செய்ய விடமாட்டோம் என ஜாக்டோ ஜியோ பெண்கள் கூட்டம் ஆர்ப்பரிப்பு... மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்*


*⭐புதுக்கோட்டை ஜாக்டோ-ஜியோ மாவட்ட நிர்வாகிகளான 5 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்*


*⭐வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து 12, 000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம் தொடங்கியது*


*⭐மதுரையில் போலீஸ் கைது செய்ய முடியாமல் திணரல்  தற்போது டார்ச்லைட் போராட்டம்*


*⭐கிருஷ்ணகியில் பெண் ஊழியர்களை மட்டும் வெளியே 6.15க்கு அனுப்ப முற்பட்டு ஆண் ஊழியர்களை ரிமாண்ட் பண்ண சூழ்ச்சியால் முறியடிக்கப்பட்டு தற்போது இரு பால் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது*


*⭐கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் பாலசுப்பிரமணியன் அவர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது விரட்டிச் சென்று கைது செய்திருக்கின்றனர்.*


*⭐கோவையில் கைதான ஆண்களை விடுவிக்கும் வரை பெண்கள் உள்ளிருப்பு டோராட்டத்தை தொடங்கினர்.*
   

*⭐ஈரோடு மாவட்ட ஓருங்கிணைப்பாளர் பாஸ்கர் பாபு வீட்டில் கைது*


*⭐தமிழகத்தில் கைது செய்யப்பட்ட அனைத்துப்  பொறுப்பாளர்களை விடுவிக்கும் வரை ஈரோடு மாவட்ட ஜாக்டோ ஜியோ போராளிகள்(ஆண்கள்,பெண்கள்) மண்டபத்தை விட்டு  வெளியேறுவதில்லை என முடிவு.*


*⭐தமிழகத்தில் நாளை 26.01.2019 ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்கள் குடியரசு தினவிழாவினை சிறப்பாக கொண்டாட உள்ள நிலையில் காவல்துறை இன்று 25.01.2019 இரவு  ஆசிரியர்கள் மற்றும் அரசூழியர்களை கைது செய்து குடியரசு தின விழாவினை சீர்குலைக்கும் நோக்கோடு விடுதலை செய்ய மறுக்கிறது.*

*தோழர்களே காவல்துறை அடக்குமுறை*

*TNGEA   பொதுச்செயலாளர் தோழர் மு.அன்பரசு தலைமை செயலக தோழர் வெங்கடேசன் உட்படசென்னையில் ஐம்பது பேர்  REMAND செய்வதற்காக  EGMORE  நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.*

*இந்த தேச துரோக செயலை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.*

*வன்மையாக கன்டிக்கிறோம்.*


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026