MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 10.01.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 மார்கழி 26♝ 10•1•2019*


🔥
🛡 பள்ளிகளை இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்;  அங்கன்வாடி பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும்... உள்ளிட்ட கோரிக்கை குறித்து ஜேக்டோ-ஜியோ முதல்வருக்கு கோரிக்கை.

🔥
🛡 2381 அரசு நடுநிலைப் பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் துவக்கம் மற்றும் ஆசிரியர் நியமனம் & பணி பற்றி தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

🔥
🛡தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு - செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡 தமிழ்நாடு NET SET Ph.D. ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் கருத்தரங்கில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று கட்டுரை சமர்ப்பிக்க அழைப்பு.

🔥
🛡 நடுநிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட அங்கன்வாடி மையங்களின் பட்டியல் -காஞ்சிபுரம் & திருச்சி மாவட்டங்களில்  ஒன்றியம் வாரியாக வெளியீடு.

🔥
🛡 புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு கையாள பயிற்சி வழங்கப்பட்டது.

🔥
🛡 ரூ.1000 பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்க தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.

🔥
🛡அரசுப்  பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  ஆங்கிலம் சரளமாக கற்க 55 புதிய செயல்திட்ட கல்வி : நெல்லை மாவட்டத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.


🔥
🛡 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால், கைது செய்ய உத்தரவிடப்பட்ட தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ்.

🔥
🛡 மதுரையை அடுத்த கொட்டக்குடி கிராமத்தில் ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள்.


🔥
🛡திருக்குறள், நீதிக்கதைகளுடன் பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தாவிடில் கடும் நடவடிக்கை  கல்வி அதிகாரிகள் உத்தரவு.

🔥
🛡போகிப் பண்டிகைக்காக மாணவர்கள் இறைவணக்க கூட்டத்தில் சொல்ல வேண்டிய SLOGANS குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது 

🔥
🛡சுற்றுச்சூழல் மாசுபடாமல் போகிப் பண்டிகையை  கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தில் புகையில்லா போகி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்  என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

🔥
🛡எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை' என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் அறிவிப்பு

🔥
🛡தமிழக அரசின் உத்தரவால், பல மாவட்டங்களில், சத்துணவு மையங்களில் காலியிடங்கள் இல்லாமல் போனது. இதனால், எட்டு மாவட்டங்களில், காலியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

🔥
🛡பாரதியார் பல்கலை பட்டம் ரத்தாகுமா? : தனியார் படிப்பு மையங்களுக்கு மேலும் சிக்கல் - நாளிதழ் செய்தி

🔥
🛡CPS மற்றும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக அளிக்கப்பட்ட அறிக்கைகள் மீது அரசு விரைவில் முடிவெடுக்கும் - முதல்வர் அறிவிப்பு.


Comments

Post a Comment

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026