MENU

Show more

பொங்கல் நல்வாழ்த்துகள்...

பொங்கலோ பொங்கல்!!!
பொங்கலோ பொங்கல்!!!

பசுஞ்சாணம் தரைமெழுகி 
வண்ணவண்ண கோலமிட்டு 
கல்லடுக்கி அடுப்பமைத்து 
மண்பானை அதிலேற்றி 
புத்தரிசி களைந்துபோட்டு 
பனைவோலை விறகெரித்து 
பொங்கிவரும் நேரத்திலே 
குலவைபோட்டு கும்பிட்டு 
பொங்கலோ பொங்கலென 
அகமகிழ சேர்ந்துரைத்து 
வெல்லமுடன் நெய்மணக்க 
பொங்கல்பானை இறக்கிவைத்து 
செங்கரும்பும் மஞ்சள்கொத்தும் 
இருபுறமும் தோரணமாய் 
விளக்கேற்றி மலரிட்டு 
நிறைநாழி அரிசிவைத்து 
சூடமேற்றி தீபம்காட்டி 
கதிரவனைத் துதித்திட்டு 
உழவுக்கும் நன்றிசொல்லி 
வாழ்த்துக்களைப் பரிமாறி 
இதயம்பூக்கும் வேளையிலே 
தமிழர்திருநாளில் தமிழ்தேசியம் 
தரணியெங்கும் சிறந்திடவே 
தமிழரெல்லாம் வேண்டிடுவோம்....!!! 

அனைவருக்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

நட்புடன் R.R

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026