MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 26.2.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 14♝ 26•2•2019*

🔥
🛡மார்ச் 8 இல் ஜாக்டோஜியோ மாவட்ட  ஆர்ப்பாட்டம் : மாநில உயர்மட்டக் கூட்டத்தில் நேற்று முடிவு.

🔥
🛡ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு : அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4.3.19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🔥
🛡தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்ற அதிமுக கோரிக்கை நிராகரிப்பு: தமிழகத்தில் போதுமான அரசு ஊழியர்கள் இல்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

🔥
🛡DEE - MID DAY MEALS - SMS Based Monitoring System - அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக நடைமுறைப்படுத்தி  மாணவர்கள் வருகை 100% இருக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் பள்ளி தலைமையாசிரியர்கள் ஈடுபட - இயக்குநர் உத்தரவு.

🔥
🛡CPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ஜனவரி - மார்ச் 2019 காலாண்டிற்கு வட்டி விகிதம் 8% அறிவிப்பு.

🔥
🛡தேர்வுப் பணிக்கான மேற்பார்வை அதிகாரிகளாக மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் குறித்து அரசாணை வெளியீடு.

🔥
🛡மாணவர்களின் கட்டுரை நோட்டுகள் தொலைந்து விட்டதாக கூறிய தலைமை ஆசிரியர் மீது திருவண்ணாமலை CEO நடவடிக்கை : தமிழ் & ஆங்கில கட்டுரை ஏடுகள், அறிவியல் ஏடு, கணித வடிவியல் ஏடு, தேர்வு விடைத்தாள்களை முறையாக பராமரிக்க அறிவுறுத்தல்.

🔥
🛡அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்களின் தமிழ் வாசித்தல் திறனை ஆய்வு செய்ய Special Teacher Visit - தலைமை ஆசிரியர்கள் ஒத்துழைக்க கோரி திருவண்ணாமலை CEO செயல்முறை வெளியீடு.

🔥
🛡தலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும் :  தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்படுத்துதல் பயிற்சியில் புதுக்கோட்டை CEO பேச்சு.

🔥
🛡வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்புக்கு, முப்பருவ பாட திட்டம் நீக்கப்படுகிறது

🔥
🛡ஏழைகளுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு.

🔥
🛡கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

🔥
🛡நிதி ஒதுக்கீட்டில் இழுபறி காரணமாக கல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் : விரைவில் கல்வி தொலைக்காட்சி அரசு கேபிள் டிவியில் 200-வது சேனலாக செயல்படும்.

🔥
🛡உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு 10 வகுப்புகள்  எடுக்க வேண்டும் -  CM CELL Reply.

🔥
🛡 10 வயது மாணவன் தயாரித்த சிறிய ரக செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானி பாராட்டு!

🔥
🛡தேர்தலில் ட்விட்டர் தலையிடக்கூடாது :
நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் காரணங்களுக்காக ட்விட்டர் தலையிடக் கூடாது என்று தகவல் தொழில்நுட்பங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு அறிவுறுத்தியுள்ளது.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28