MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 01.3.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*.
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 17♝ 1•3•2019*

🔥
🛡தமிழக பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது.
இந்த தேர்வில், 8.61 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.

🔥
🛡மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2019 முதல் 3% கூடுதல் அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு.

🔥
🛡 அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

🔥
🛡புதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் அக்கூட்டமைப்பினர்.

🔥
🛡TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு : தேர்வுக்கு மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தாள் ஒன்று, இரண்டுக்கான தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

🔥
🛡அரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்பவர் மற்றும் வாங்குபவர் என இரு தரப்பினர் மீதும் நடவடிக்கை -
டிஜிபி அலுவலகம்  அறிவிப்பு.

🔥
🛡தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி.- ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தேவைப்பட்டால் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

🔥
🛡அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்' என, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

🔥
🛡அபிநந்தனை இன்று  விடுவிக்கப்படுவார் - பாக்.பிரதமர்  அறிவிப்பு :
அமைதிக்கான நல்லெண்ண அடிப்படையில் நடவடிக்கை என பிரதமர்  தகவல்.

🔥
🛡மதுரை, தல்லாகுளத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக (சிஇஓ) வளாகத்திற்குள் பள்ளி கல்வித்துறையின் மண்டல கணக்குத்துறை பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் லஞ்ச ஒழிப்பு துறையினரால் சோதனையிடப்பட்டது. கணக்கில் காட்டப்படாத ரூ.2.50 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

🔥
🛡ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செயல்வழிக்கற்றல் கற்பித்தல் முறையும் 4-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையினையும் பின்பற்ற வேண்டும் - தொடக்கக் கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28