MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 22.2.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 10♝ 22•2•2019*


🔥
🛡5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

🔥
🛡10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மார்ச் 14,18,20,22 ஆகிய 4 நாட்களுக்கு விடுமுறை - தேர்வுத்துறை உத்தரவு

🔥
🛡தமிழகத்தில் 2,380 அங்கன்வாடி மையங்களை எல்கேஜி வகுப்புகளாக மாற்றி முதல்வர் அறிவித்த திட்டம் முழுமையாக செயல்பாட்டிற்கு வரவில்லை. அங்கு மாறுதல் செய்யப்பட்ட இடைநிலை உபரி ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

🔥
🛡TNSCHOOLS ஆண்ட்ராய்ட் மாணவர் வருகைப் பதிவு செயலி தற்போது மேம்படுத்தப்பட்ட வடிவம் 2.1.9 கொடுக்கப்பட்டுள்ளது.

🔥
🛡வருமான வரி  படிவம் சம்பளப்பட்டியலில் வைக்க தேவையில்லை - சென்னை கருவூல கணக்குத்துறையின்  RTI கடிதம் மூலம் தகவல்

🔥
🛡 அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது

🔥
🛡மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கை திட்டம் சரியாக நடந்ததா என, தனியார் நிறுவனம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது

🔥
🛡அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மிக விரைவில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔥
🛡மாண்புமிகு தமிழ் நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் 2018-2019 ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலுக பணியாளர்களுக்கு ஆதாருடன் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS AADHAR ENABLED BIO METRIC ATTENDANCE SYSTEM) முறையிலான வருகை பதிவேடு முறைமை அமல்படுத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு..

🔥
🛡பள்ளிக் கல்வி - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்படும் விதமாக மையப்படுத்தப்பட்ட படப்பதிவு நிலையம் (Studio) அமைக்கப்படும் பணி நடைபெறுவது- கல்வி சார்நிகழ்ச்சிகள் படம்பிடிப்பது - சார்ந்து நாமக்கல்  CEO செயல்முறைகள் வெளியீடு.

🔥
🛡தமிழகத்தில், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை இந்த ஆண்டு ரத்து செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என நர்சரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிசங்கத்தினர் அறிவிப்பு.


🔥
🛡தொடக்கக்கல்வி - நிதியுதவி பெறும் ஆரம்ப/ நடுநிலை பள்ளிகளுக்கு 2018 ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்து தொடக்கக் கல்வி  இயக்குநர் உத்தரவு!




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28