MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 04.02.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 தை 21♝ 4•2•2019*

🔥
🛡கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான 'ஆல் பாஸ்' திட்டத்தை மாற்ற பொது கல்வி வாரியத்தை கூட்டி தமிழக அரசு முடிவு செய்ய உள்ளது.


🔥
🛡நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக, ஓய்வூதிய பலன்களை நிறுத்தி வைக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

🔥
🛡ஐகோர்ட் தீர்ப்பை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல் செய்க சமவேலை சமஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை தற்காலிக, ஒப்பந்த வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த கோரிக்கை.

🔥
🛡தமிழகம் முழுவதும், பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலை ஸ்கூட்டர்கள் வழங்குவதற்கான நிர்வாக அனுமதியை ஒரு மாதத்தில் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் எங்களை ஆளுங்கட்சி திரும்பி பார்க்கும் வகையில் அதிரடி முடிவெடுப்போம்: சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டத்தில் தீர்மானம்

🔥
🛡தமிழகம் முழுவதும் விளையாட்டு மைதானங்கள் இல்லாமல், விளையாட்டுகளில் அரசு பள்ளி மாணவர்களின் திறமைகள் முடக்கப்படுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை

🔥
🛡ஓய்வூதிய திட்ட தொகை ஆசிரியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற துணை சபாநாயகர்  தம்பிதுரை கூறுகின்றார். - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது அரசு பழிவாங்கும் நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளத்  கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

🔥
🛡CPS- 30 ஜுலை 2016ன் படி மாநிலம் வாரியான அரசு ஊழியர் எண்ணிக்கை மற்றும் பங்களிப்பு தொகை விவரம் வெளியீடு. அதில்  தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் செலுத்தவில்லை என்று தகவல்.

🔥
🛡அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள பட்டியல், இன்று தயாரிக்கப்படுகிறது - நாளிதழ் செய்தி

🔥
🛡உடுமலை, அமரா வதி நகர், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன.சைனிக் பள்ளியின், 2019 - 20ம் ஆண்டு, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல் நடந்தது. தேர்வு முடிவுகள், இன்று, www.sainik.schoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

🔥
🛡அரசாணை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு - தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர் சம்பளம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28