MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 25.2.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 13♝ 25•2•2019*

🔥
🛡TNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியீடு - DEO Exam 2019 Hall Ticket Published!

🔥
🛡தமிழக அரசுக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், விரைவில் புதிதாக 500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

🔥
🛡சிறைமீண்ட ஜாக்டோ-ஜியோ போராளி தோழர் வே.சிவா  நேற்று மரணமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரக்கிளையின் உறுப்பினர். மாநில நிர்வாகிகள் நேரில் அஞ்சலி .

🔥
🛡கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செக். பி.எட் கல்வியியல் பாடத்துடன் கணினி அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்று இருந்தால் மட்டுமே அரசு பள்ளிகளில் வேலை பெற முடியும் - நாளிதழ் செய்தி

🔥
🛡சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18ம் தேதி கடைசி நாள் ஆகும். முதல்நிலை தேர்வு ஜூன் மாதம் 2ம் தேதி நடைபெறும்.

🔥
🛡அரசு பள்ளியில் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின்   மகள் இரண்டாம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.- நாளிதழ் செய்தி

🔥
🛡சொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்பில்  ஸ்மார்ட் வகுப்பறையை  அமைத்த திருவண்ணாமலை மாவட்ட, போளூர் வட்டார, பாலம்பாக்கம்  தலைமை ஆசிரியை விஜயலட்சுமி.

🔥
🛡தேர்வில் வெற்றி பெற சிரமப் பட வேண்டியதில்லை,கவனத்துடன் படித்தாலே போதும்: புதுக்கோட்டை  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு.

🔥
🛡உத்தரப்பிரதேசத்தின் பொதுத்தேர்வில் காப்பியடிப்பதில் இருந்து தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து சுமார் 6 லட்சம் மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்தனர்.

🔥
🛡பள்ளிக் கல்வி - அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு மையம் சார்பாக குழுக்கள் ஏற்படுத்த - நாமக்கல் CEO உத்தரவு

🔥
🛡திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளையின் 22-ஆவது ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28