MENU

Show more

சுங்க கட்டணம் உயர்வு

செப்டம்பர் 1ம் தேதி முதல் 26 சுங்கச் சாவடிகளில் கட்டணம் தமிழகம் முழுவதும் உயர்வு


நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 374 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், வசூல் செய்யும் உரிமை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில், 26 சுங்கச் சாவடிகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும், 18 சுங்கச்சாவடிகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. ஆனாலும், கட்டணம் வசூலிக்கும் உரிமை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டிற்கு ஒரு முறை வசூலிக்கப்படும் கட்டணத்திலிருந்து 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், ஆம்னி பஸ், டாக்சி, சரக்கு வாகனங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் நல்லூர் (திருவள்ளூர்), கொடைரோடு (திண்டுக்கல்), வேலஞ்செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜய மங்கலம் (குமாரபாளையம்), புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), ஒமலூர், சமயபுரம் (திருச்சி), மொரட்டாண்டி (விழுப்புரம்), வைகுந்தம் (சேலம்), நாதக்கரை (சேலம்), வீரசோழபுரம் (சேலம்) , மேட்டூர்பட்டி (சேலம்), பரணூர் (காஞ்சிபுரம்்), அதூர் (செங்கல்பட்டு), வல்லவன்கோட்டை (தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), புதுக்கோட்டை (தூத்துக்குடி), பொன்னம்பலப்பட்டி (திருச்சி), மணவாசி (திருச்சி), திருப்பரைத்துரை (திருச்சி), திருமாந்துரை (விழுப்புரம்), செங்குறிச்சி (விழுப்புரம்), நெமிலி (பெரும்புதூர்) உட்பட 26 சுங்கசாவடிகளுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி 64 கி.மீ நீளமுள்ள சாலைகளுக்கு ஒரு தடவை செல்ல ரூ.65லிருந்து ரூ.70 ஆகவும், லாரி, ஆம்னி பஸ் ரூ.227 லிருந்து ரூ.250 ஆகவும். கார் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ரூ.113லிருந்து ரூ.124 ஆகவும் உயருகிறது. இதனால், மீண்டும் சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காய்கறி, மளிகை பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28