MENU

Show more

கலாம் சலாம்....


சர்வதேச செயற்கைக்கோளுக்குஅப்துல்கலாம் பெயர்

கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளின் சார்பில் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ள சர்வதேச செயற்கைக் கோளுக்கு மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரைச் சூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலநடுக்கம், காட்டுத்தீ, பனிப்புயல் போன்ற இயற்கை சீற்றங்களைப் பற்றி முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை செய்யவும், இவற்றினால் ஏற்படக்ககூடிய பேரிடர்களை தவிர்ப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ‘கேனியஸ்’ (CANada-EUrope-US-ASia) என்ற கனடா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அமைப்பு இயங்கி வருகிறது.

கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரை மையமாக வைத்து இயங்கிவரும் இந்த அமைப்பு மேற்கண்ட இயற்கை பேரிடர்கள் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் ஒன்றை அனுப்பி வைக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகின்றது.

“disaster risk reduction – GlobalSat for DRR” என இந்த செயற்கைக் கோளுக்கு ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த செயற்கைக் கோளுக்கு ‘கலாம் குளோபல்சாட்’ “UN Kalam GlobalSat” என பெயரிட தீர்மானித்துள்ளதாக ‘கேனியஸ்’ அமைப்பின் தலைவரான மிலின்ட் பிம்ப்ரிக்கர் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் நியூ யார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின்போது 150 நாடுகளின் ஒப்புதலுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்கைக் கோள் ஏவப்பட வேண்டிய முக்கிய காரணம் தொடர்பாக “உலக விண்வெளி இயக்கம்-2050″ என்ற தனது நூலில் அப்துல் கலாம் ஏற்கனவே தெளிவாக பதிவு செய்திருந்தார். இயற்கை பேரிடர்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் பஞ்சம், சுகாதாரம் சார்ந்த கல்வி மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை போன்றவற்றைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டிருந்த அப்துல் கலாமின் பெயரை இந்த சர்வதேச செயற்கைக் கோளுக்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும்.

அவரது பெயரை இந்த சர்வதேச செயற்கைக் கோளுக்கு சூட்டுவது, இந்த துறையில் வருங்கால ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதாகவும் அமையும் எனவும் மிலின்ட் பிம்ப்ரிக்கர் கூறியுள்ளார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026