MENU

Show more

குறைந்தபட்ச சம்பளம் 20000ரூ

இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு! -s இனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆயிரம்: மத்திய அரசு முடிவு!
புதுடெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளமாக 20 ஆயிரம் ரூபாயை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி பதில் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொழிலாளர் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இல்லை என தெரிவித்து தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 2ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், டெல்லியில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், கடந்த சில நாட்களாக, மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

பாஜகவின் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான குழு இந்தப் பேச்சில் ஈடுபட்டு உள்ளது.அமைச்சர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில் மத்திய அரசு தரப்பில் சில அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. அதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம் 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது என்ற தகவல், தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டு வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இப்போதைய குறைந்தபட்ச மாத சம்பளம் 4,160ஐ உயர்த்த வேண்டும் என்பது தான், வேலை
நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கை என்பதால் மத்திய அரசின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் முன்வந்து உள்ளன. எனினும் தங்கள் தலைவர்களிடம் கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளன.

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28