MENU

Show more

வெள்ளி திரை விமர்சனம் வாலு

வெள்ளி திரை விமர்சனம் வாலு

நீண்ட இடைவெளிக்கு பின் வெளிவந்துள்ளது சிம்புவின் படம்... சிம்பு ரசிகர்களுக்கான சினி வேட்டை...

சிம்பு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா நரேன் ரெயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்த சிம்பு, தனது சொந்த முயற்சியிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்று வேலை தேடி அலைகிறார். மறுபுறம் பெரிய குடும்பத்து பெண்ணான ஹன்சிகா மொத்வானி தனது அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த ஐபோனை தொலைத்துவிடுகிறார். இந்த ஐபோன் ஒருநாள் சிம்பு வேலை தேடி போகும்போது அவரது கண்ணில் அகப்படுகிறது.
தொலைந்துபோன ஐபோன் சிம்பு கைவசம் இருப்பதை அறிந்துகொண்ட ஹன்சிகா மொத்வானி அதை தான் நேரில் வாங்கிக் கொள்வதாக கூறுகிறாள். இதற்கிடையில், ஹன்சிகா மொத்வானியை பஸ்ஸில் பார்க்கிறார் சிம்பு. பார்த்தவுடனேயே அவள்மீது சிம்புவுக்கு ஈர்ப்பு வந்துவிடுகிறது.
அவளைத் தொடர்ந்து போகும்போது, ஒரு விபத்தில் சிக்கிறார் ஹன்சிகா. அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் கொண்டுபோய் சேர்க்கிறார் சிம்பு. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தன் கையில் இருந்த ஐபோனை அடமானம் வைத்து ஹன்சிகாவுக்கு வைத்தியம் பார்க்கிறார்.
ஆனால், அப்போது அந்த ஐபோனுக்கு சொந்தக்காரி ஹன்சிகாதான் என்பது சிம்புவுக்கு தெரிவதில்லை. ஹன்சிகாவும் தன்னை ஆஸ்பத்திரியில் யார் சேர்த்தது என்று தெரியாமலேயே அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார்.
இந்நிலையில், அடமானம் வைத்த செல்போனை மீட்டு, அதற்கு உரியவரிடம் கொடுக்க செல்கிறார் சிம்பு. அப்போது, ஹன்சிகாதான் அந்த பெண் என்பது தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். அவளிடம் தனது காதலை சொல்கிறார். ஆனால், ஹன்சிகாவோ இவரது காதலை ஏற்றுக் கொள்வதில்லை.
மாறாக தனது முறைமாமனுடன் தனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும், இன்னும் 2 வருடத்தில் திருமணம் நடக்கப்போவதாகவும் கூறுகிறாள். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடையும் சிம்பு, இருவரும் நண்பர்களாக பழகுவோம் என்று கூறுகிறான். அவளும் அதற்கு ஒப்புக்கொள்கிறாள்.
ஆனால், சிம்புவோ, ஹன்சிகாவிடம் நட்புடன் பழகி 2 வருடத்திற்குள் தனது காதலை அவளுக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்ற திட்டத்துடன் அவளுடன் பழக ஆரம்பிக்கிறார். ஆனால், ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் அவளது முறைமாமன் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வட்டிக்கு பணம் கொடுப்பது என மிகப்பெரிய தாதாவாக வலம் வருபவர்.
இவ்வளவு முரடனான மாமனையும் மீறி, ஹன்சிகாவுக்கு தனது காதலை சிம்பு புரிய வைத்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. இந்த படத்தில் சிம்புவின் நடிப்பு மிகவும் அபாரம். ரொம்பவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் பார்த்த சிம்புவை இதிலும் பார்க்க முடிகிறது. அதேபோல், சந்தானம், விடிவி கணேஷுடன் சேர்ந்து கலாட்டா செய்வதிலும் நடிப்பில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் சூப்பர் ஸ்டார்களை மிஞ்சும் அளவுக்கு மாஸ் காட்டியிருக்கிறார்...
லிட்டில் சூப்பர் ஸ்டாரின் திரை விருந்து...
அதே மசாலா படமாக இருந்தாலும் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.. மொத்தத்தில் வாலு... செம feelu .

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28