MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் - 30.10.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஐப்பசி 13♝ 30•10•2018*


🔥
🛡தீபாவளி  பண்டிகையை முன்னிட்டு
அரசு  ஊழியர்கள்  மற்றும் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து  பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தீபாவளி பண்டிக்கைக்கு முந்தைய நாளான திங்கள் கிழமை 05.11.2018 அன்று விடுமுறை அறிவிப்பு. விடுமுறையை  10.11.18  சனிக்கிழமை அன்று ஈடுசெய்ய வேண்டும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡கல்வித்துறையில் நிர்வாக நலன் கருதி 3 இணை இயக்குநர்கள்  உட்பட  பணியிட மாற்றம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

🔥
🛡TNPSC குரூப்-1 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுகிறது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிசம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது .

🔥
🛡நாளை சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை
தேசிய ஒற்றுமை  நாளாக அறிவித்து   அனைத்து மாணவர்களும் 
உறுதிமொழியை
 எடுத்துக் கொள்ள அனைத்துவகை  பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

🔥
🛡1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து  ஆணைகள் வெளியிடப்படுகிறது.அரசாணை (நிலை) எண். 840 Dt: October 29, 2018


🔥
🛡பள்ளிக்கல்வி -மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் - 2018-19 (தேர்வு 2017)- தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு (National Means-cum-Merit விண்ணப்பங்களை Scholarship Scheme) 31.10.18 வரை  இணையதளத்தில் பதிவேற்றுதல் சார்ந்து செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡 அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தினமும் 2 மணிநேரம்  பாடம் நடத்த வேண்டும் : பள்ளிக்கல்வி துறை புதிய முயற்சி.

🔥
🛡 பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது 
கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் எச்சரிக்கை.

🔥
🛡 அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிவகுப்பு குறித்த விவரம்
அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் .

🔥
🛡TNPSC  'குரூப் - 4' தேர்வில், சான்றிதழ் பதிவு செய்தவர்களின்
பட்டியல் வெளியீடு.

🔥
🛡 மாவட்ட ஆட்சியர் IAS பணிக்கு அடுத்த நிலையில் இருக்கும் டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது என மறுத்த தமிழக அரசு - நாளிதழ் செய்தி.

🔥
🛡சேலம் அருகே மது அருந்தி பள்ளிக்கு வந்த பிளஸ் 2  மாணவர்கள் மூவர்  இடைநீக்கம் - நாளிதழ் செய்தி.

🔥
🛡 அரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி - நாளிதழ் செய்தி.

🔥
🛡நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை
தொடங்க வாய்ப்பு -  வானிலை ஆய்வு மையம் தகவல்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026