MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 1.11.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 ஐப்பசி 15♝ 01•11•2018*

🔥
🛡 மனித வள மேம்பாட்டு அமைச்சக வழிகாட்டுதலின்படி,தூய்மை பாரதம், தூய்மையான பள்ளி திட்டத்தின்கீழ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருதும், தலா ரூ. 5,000 காசோலை பரிசும் வழங்கப்பட்டது.

🔥
🛡அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்ய DEO களுக்கு தொடக்கக் கல்வி  இயக்குனர்  உத்தரவு.

🔥
🛡 அரசு பள்ளிகளில் போலி சான்றிதழ் அளித்துள்ள  200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை நீக்க முடிவு ; மேலும் அனைவரின் சான்றிதழ்களை சரிபார்க்க முடிவு.

🔥
🛡ஒன்றாம் வகுப்பு கையாளும்  ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டிற்கும் , தலைமையாசிரியர்களுக்கு மேலாண்மை திறனுக்கும்  ஒருநாள் பயிற்சி (24.10.18 - 13.11.18) குறித்து திருவண்ணாமலை CEO  செயல்முறைகள்
வெளியீடு.

🔥
🛡பொது சுகாதாரத்துறையில் ஒரே நேரத்தில் 700க்கும் மேற்பட் ஆய்வக நுட்பனர்கள்  நீக்கம் ;  பணியாளர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி.

🔥
🛡ஊட்டியில் ஒரே பள்ளியில் 80 மாணவ மாணவியருக்கும் 27 ஆசிரியர்களுக்கும்  டெங்கு காய்ச்சல் பாதிப்பு :  மருத்துவமனையில் அனுமதி - நாளிதழ் செய்தி.

🔥
🛡தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணியமாறுதல் மூலம் முதுகலையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் திருத்திய தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல்-சார்பாக செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியின் பழுதடைந்த கட்டிடம் நடிகர் இராகவ லாரன்ஸின் நிதியுதவியால் (5இலட்சம்) சீரமைக்கப்பட்டது- நாளிதழ் செய்தி

🔥
🛡பள்ளிக்கல்வி மேம்பாட்டிற்கு ஸ்டுடியோ மற்றும் புதிய சேனல் விரைவில்  ஆரம்பிக்கப்படும் :பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

🔥
🛡பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு ஆன்லைன் முறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

🔥
🛡SBI வங்கியின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை
டெபிட் கார்டுகளில் நேற்று முதல் தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

🔥
🛡 தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் ஆந்திராவில், வட கிழக்கு பருவ மழை  தீவிரம் அடையும் ; தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களில் 2 நாட்களுக்கு விடாமல் மழை கொட்டும்
 - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026