MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 29.10.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 ஐப்பசி 12♝ 29•10•2018*

🔥
🛡 ஜாக்டோ ஜியோ நேற்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள் :
* ஓய்வூதியம் சாத்தியமில்லை என்ற முதல்வர் கருத்துக்கு கண்டனம்
*TNPTF தனிச்சங்க போராட்டத்தை கைவிடக் கோருதல்
*பிரிந்தவர்களை சேர்க்க 8 பேர் கொண்ட இணைப்புக்குழு அமைத்தல்
* புதிதாய் இரு சங்கம் இணைப்பு.
*திருவண்ணாமலை ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் ;  பணிபாதுகாப்பு வலியுறுத்தல்.
* 9.11.18 & 10.11.18 இல்  உயர்மட்ட குழு கூட்டம்

🔥
🛡JACTTO JEO நேற்றைய கூட்டத்தில் நமது  இயக்கத்தின் அரசாணை நகல் எரிப்பு போராட்டம் ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. நமது மாநில தலைவர் திருமதி.மணிமேகலை அவர்கள் கோரிக்கையை நிராகரித்து நவம்பர் 26-ல் போரட்டம் நடைபெறும் என அறிவிப்பு

🔥
🛡புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய அனைத்து சங்கக ளுடன் இணைந்து போராட தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் -தீர்மானம் நிறைவேற்றம்

🔥
🛡ஜாக்டோ ஜியோ பேரமைப்பானது நவம்பர் 8 அன்று  அனைத்து சங்கங்களையும் ஒன்று இணைக்க பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும்.
நவம்பர் 27 முதல் காலவரையற்ற  வேலைநிறுத்தம்

🔥
🛡சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து
இன்று முதல் பள்ளிகளில் தங்கு தடையின்றி சத்துணவு வழங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு

🔥
🛡இன்று முதல் சத்துணவு ஊழியர்கள் ஸ்டிரைக் :  சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் -  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு.

🔥
🛡சத்துணவு பணியாளர் போராட்டம் :  பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு விநியோகத்தை பாதிக்காத வண்ணம் தலைமையாசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்து விழுப்புரம் CEO  செயல்முறைகள்
வெளியீடு.

🔥
🛡 தொடக்கக்கல்வி - அரசு நிதிஉதவி பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனங்கள் செய்யக்கூடாது -  இயக்குனர் செயல்முறைகள்
வெளியீடு.

🔥
🛡ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: அமைச்சர் தகவல்

🔥
🛡பள்ளிக்கே செல்லாமல்  வீட்டிலேயே படித்த 12 வயது சிறுமி தகுதித் தேர்வில் தேர்வானதை தொடர்ந்து 10 ஆம் வகுப்புத் தேர்வு எழுத மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி.

🔥
🛡தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தால் முழு ஊதியம் வழங்கப்படும் -  தமிழக அரசின் அறிவிப்பு என  தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்.

🔥
🛡மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல வசதியாய் அரசு அலுவலகங்களில் டிசம்பர் 31 -க்குள் "சாய்வு தளம்,லிஃப்ட், கழிப்பறை" அமைக்க உத்தரவு - நாளிதழ் செய்தி.

🔥
🛡தொடக்கக்கல்வி - அரசு நிதிஉதவி பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனங்கள் செய்யக்கூடாது - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡'மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு, வரும், 1ம் தேதி துவங்குகிறது. நவ., 30 வரை பதிவு செய்யலாம்' என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்து உள்ளது. 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026