MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 24.10.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஐப்பசி 7♝ 24•10•2018*


🔥
🛡 தமிழக அரசு  தீபாவளி போனஸ் அறிவிப்பு :  லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை ;  நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை.

🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் இணை இயக்குநர்களான திரு. குப்புசாமி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராகவும், திரு.உஷாராணி ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குநர் நிலை உறுப்பினராகவும் பதவி உயர்வு.

🔥
🛡 பாரதியார் / குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் மாநில/தேசிய அளவிலான கால அட்டவணை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
வெளியீடு.

🔥
🛡ஆதிதிராவிடர் நலத்துறையில் இடமாறுதல்  கலந்தாய்வு ஒத்திவைப்பு :
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ADW ஆசிரியர் கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் அறிவிப்பு.

🔥
🛡தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இல்லாமல் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 4.10.18 போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு  ஒரு நாள் ஊதிய பிடித்தம் செய்ய  தருமபுரி CEO உத்தரவு.

🔥
🛡தமிழ்நாட்டுடன் இணைந்ததை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 1.11.18 உள்ளுர் விடுமுறை;  10.11.18 வேலைநாள் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

🔥
🛡
நீட் தேர்வில் வினாத்தாள் குளறுபடி காரணமாக 196 கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

🔥
🛡பெற்றோர் இல்லாததால் படிக்க வசதியின்றி சமூக ஊடகங்களில் உதவி கோரியதை அடுத்து  அக்கா & தம்பி இருவரின் படிப்பு செலவை அரசே ஏற்கும்; அவர்களை படிக்க வைக்கும் -  முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

🔥
🛡 நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்ப மத்திய அரசு திட்டம்.

🔥
🛡 பட்டாசு வெடிக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதிக்கக் கோரிய வழக்கில் கடுமையான நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம்  அனுமதி : ஆன்லைன் (இ-காமர்ஸ் ) மூலம் பட்டாசு விற்க முடியாது

🔥
🛡 ஓய்வூதியப் பலன்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் நாடுகளின் தரவரிசையில் 34 நாடுகளின் பட்டியலில் கடைசியிலிருந்து இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

🔥
🛡திருவண்ணாமலையில் ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை - காவல் துறை விசாரணையில் தகவல்.

🔥
🛡ஆசிரியரை பள்ளியிலேயே தாக்கிய செயலுக்கு TNPTF உள்ளிட்ட பல்வேறு ஆசிரிய சங்கங்கள் கண்டனம்:  ஆசிரியர்கள் பணிப்பாதுகாப்பு சட்டம் தேவை என கோரிக்கை.

🔥
🛡புதிய பென்சன் திட்டத்திற்காக ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த 40 ஆயிரம் கோடி ரூபாய் எங்கே ? முதல்வருக்கு தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணி கேள்வி கேட்டுள்ளது  - நாளிதழ் செய்தி

🔥
🛡மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், திருவண்ணாமலை முன்பு ஆசிரியர் பணி பாதுகாப்பு கோரி கண்டன அனைத்து ஆசிரியர்களும் சேர்ந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

🔥
🛡 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26, 27ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026