TN SCHOOLS REOPEN HAPPY 2026
ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு இனிய நல்வாழ்த்துகள் ...
இன்று (05.01.2026),
மூன்றாம் பருவத்தின்
முதல் வேலைநாள் மட்டுமல்ல,
2026 - ஆம் ஆண்டின்
முதல் வேலைநாளும்கூட...
ஆசிரியர்களின்
அல்லல் நீங்கிட,
அரசுப் பள்ளிகளைக் காத்திட,
பணிக் கலாச்சாரம் போற்றிட...
கற்றலும், கற்பித்தலும்
இனிதே அமைந்திட...
இதயபூர்வ வாழ்த்துகள்.
மகிழ்ச்சியான சூழலை
வகுப்பறையில் பேணிடுவோம்.
மாணவர்க்காகவே
ஆசிரியர் என்பதை
மனதினில் அனைவரும்
நிறுத்திடுவோம்.
சமூகத்தை நேசிக்க
கற்றுக் கொடுப்போம்...
சமூகத்தை சலவைசெய்ய
கற்றுக் கொடுப்போம்.
பண்பாடு, கலாச்சாரம்
பந்தி வைப்போம்...
பச்சை மூங்கிலை
புல்லாங்குழலாக்கிடுவோம்,
மாணவரின் அறிவுத் திரியில்
தீபம் ஏற்றிடுவோம்...
மாணவர்களெனும் நதிகளை
அறிவெனும் கடலில் சேர்த்திடுவோம்.
இனிதாய் அமையட்டும்
இவ்வாண்டு💐💐💐....
வாழ்த்துகளுடன்..
R.R - ADMIN TNSOCIALPEDIA

Comments
Post a Comment