MUTUAL FUND INVESTMENT RETURNS
MUTUAL FUND INVESTMENT RETURNS
மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்களின் தேர்வு:170% வரை எகிறிய 13 ஸ்மால் கேப் பங்குகள் -இதில் 5 மல்டிபேக்கர்!
ARTICLE COURTESY : TAMIL GOOD RETURNS / By Pugazharasi S
பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் எப்போதுமே ரகசியமாக சில வைரங்களை தேடிப்பிடித்து லாபம் பார்ப்பார்கள். நடப்பு 2025-26 நிதியாண்டில், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் குறிவைத்து வாங்கிய 13 ஸ்மால் கேப் பங்குகள் வெறும் 10 மாதங்களிலேயே 170% வரை உயர்ந்து ஒட்டுமொத்த சந்தையையும் அதிர வைத்துள்ளது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், இந்த 13 பங்குகளில் 5 பங்குகள் மல்டி பேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை கொடுத்துள்ளன.
லுமாக்ஸ் ஆட்டோ (Lumax Auto), ஹிந்துஸ்தான் காப்பர் (Hindustan Copper) போன்ற நிறுவனங்கள் இந்த லிஸ்டில் டாப் கியரில் பறக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்ட் ஜாம்பவான்கள் ஏன் இந்தப் பங்குகளை அள்ளினார்கள்? அந்த 13 பங்குகள் எவை? நீங்களும் இதில் முதலீடு செய்திருக்கிறீர்களா? இனி முதலீடு செய்யலாமா, வாருங்கள் விரிவாக பார்ப்போம். இரட்டை இலக்க வருமானம்! கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து, சுமார் 205 ஸ்மால் கேப் நிறுவனங்களில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தங்களது முதலீட்டு அளவை (Stake) கணிசமாக உயர்த்தியுள்ளன.
சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், மியூச்சுவல் ஃபண்டுகள் இந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சி மீது நம்பிக்கை வைத்து பங்குகளை வாங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையின் (BSE) ஸ்மால்கேப் பிரிவில் உள்ள சுமார் 706 நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சுமார் 205 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இதில் சுமார் 80 பங்குகள் இந்த நிதியாண்டில் ஏற்கனவே இரட்டை இலக்க லாபத்தை எட்டியுள்ளன. சாதனை படைத்த பங்குகள்! இந்த ஆய்வில் மேற்கொண்டு மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் , மேற்கண்ட பங்குகளில் 13 பங்குகள், வெறும் 10 மாதங்களுக்குள் 70 - 170% அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. குறிப்பாக 5 பங்குகள் மல்டிபேக்கராக உருவெடுத்துள்ளன. லிஸ்டில் உள்ள பங்குகள்?
லுமாக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ் (Lumax Auto Technologies) நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 174% ஏற்றம் கண்டுள்ள இப்பங்கு 540 ரூபாயில் இருந்து, 1479 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி இதில் 14.18% ஆக பங்குகளை உயர்த்தியுள்ளன. செப்டம்பர் காலாண்டில் இது 13.86% ஆக இருந்தது.
ஹிந்துஸ்தான் காப்பர் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 148% ஏற்றம் கண்டுள்ள இப்பங்கு, 221 ரூபாயில் இருந்து, 548 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டுகள் டிசம்பர் காலாண்டு நிலவரப்படி 0.73% ஆக பங்குகளை உயர்த்தியுள்ளன. இது செப்டம்பர் காலாண்டில் 0.49% ஆக இருந்தது.
ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் பங்கை பொறுத்த வரையில் நடப்பு நிடியாண்டில் 135% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கில் செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி 0.72% பங்குகளை மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 0.95% ஆக உயர்ந்துள்ளது.
குவாலிட்டி பவர் எலட்ரிகல் (Quality Power Electrical Equipments) குவாலிட்டி பவர் எலட்ரிகல் எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 119% அதிகரித்துள்ளது. இப்பங்கானது 318 ரூபாயில் இருந்து 698 ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இதனிடையே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் 3.84% பங்கு விகிதத்தில் இருந்து, டிசம்பர் காலாண்டில் 4.23% ஆக ஹோல்டிங்கை உயர்த்தியுள்ளன.
குஜராத் மினரல் டெவலப்மென்ட் குஜராத் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (Gujarat Mineral Development Corporation) பங்கை பொறுத்த வரையில் 2026ம் நிதியாண்டில் இதுவரையில் 103% ஏற்றம் கண்டுள்ளது, இப்பங்கானது 265 ரூபாயில் இருந்து 539 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதில் பங்கு விகிதமானது டிசம்பர் காலாண்டில் 0.40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Dredging Corporation of Indiaa) டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா பங்கானது நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 95% ஏற்றம் கண்டுள்ளது. 544 ரூபாயில் ஆரம்பித்த ஏற்றமானது 1,064 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் 2% பங்கை வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 3.64% ஆக உயர்த்தியுள்ளன.
இந்தியன் மெட்டல்ஸ் & ஃபெர்ரோ அல்லாய்ஸ் இப்பங்கானது நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 85% ஏற்றம் கண்டுள்ளது. 610 ரூபாயில் ஆரம்பித்த ஏற்றமானது 1,128 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கிடையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் 0.10% பங்கை வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் சற்று உயர்த்தி 0.12% ஆக உயர்த்தியுள்ளன.
தங்கமயில் ஜுவல்லரி தங்கமயில் பங்கானது நடப்பு நிதியாண்டில் 85% அதிகரித்துள்ளது. இப்பங்கானது 2,007 ரூபாயில் இருந்து 3,710 ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இதனிடையே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செப்டம்பர் காலாண்டில் 14.31% பங்கை வைத்திருந்தன. இது டிசம்பர் காலாண்டில் 15.61% ஆக ஹோல்டிங்கை உயர்த்தியுள்ளன.
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர்
பஜாஜ் கன்ஸ்யூமர் கேர் பங்கை பொறுத்த வரையில் நடப்பு நிதியாண்டில் 76% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கில் செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி 14.61% பங்குகளை மியூச்சுவல் ஃபண்டுகள் வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 15.02% ஆக உயர்ந்தியுள்ளன.
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் இப்பங்கானது நடப்பு நிதியாண்டில் 75% அதிகரித்துள்ளது. இது 34 ரூபாயில் இருந்து 60 ரூபாய் அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கில் மியூச்சுவல் ஃபண்டுகள் செப்டம்பர் காலாண்டில் 14.83% பங்கினை வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 23.82% ஆக உயர்த்தியுள்ளன. இது மிகப்பெரிய அளவிலான அதிகரிப்பாகும்.
ஆர்பிஎல் வங்கி நடப்பு நிதியாண்டில் இதுவரை 74% அதிகரித்துள்ள இப்பங்கு, 174 ரூபாயில் இருந்து 302 ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இப்பங்கில் செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் 30.60% பங்கினை வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 34.44% அளவுக்கு உயர்த்தியுள்ளன. இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
சிட்டி யூனியன் வங்கி சிட்டி யூனியன் வங்கி பங்கானது நடப்பு நிதியாண்டில் இதுவரை 72% அதிகரித்துள்ளது. இது 157 ரூபாயிலிருந்து 270 ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இப்பங்கில் செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் 28.74% பங்குகளை வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 31.19% அளவுக்கு உயர்த்தியுள்ளன. இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய அதிகரிப்பாகும்.
டிசிஎபி வங்கி இப்பங்கானது நடப்பு நிதியாண்டில் இதுவரை 71% அதிகரித்துள்ளது. இது 112 ரூபாயில் இருந்து 191 ரூபாயாக உச்சத்தை தொட்டுள்ளது. இப்பங்கில் செப்டம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகள் 21.48% பங்குகளை வைத்திருந்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 21.73% அளவுக்கு உயர்த்தியுள்ளன. மேற்கண்ட பங்குகள் பலவும் ஏற்கனவே சிறப்பான ஏற்றம் கண்டுள்ள நிலையில், இனி வாங்க வேண்மெனில் அவற்றின் நிதி நிலவரம் எப்படி, விற்பனை வளர்ச்சி,டெக்னிக்கலாக எப்படி இருக்கிறது என அனைத்தும் பார்த்து வாங்க திட்டமிடலாம்.
ALSO READ | BEST SIP PLAN INVESTMENT IDEAS
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும்...
Read more at: https://tamil.goodreturns.in/market-update/which-13-smallcap-stocks-have-surged-up-to-170-in-fy26-which-turned-into-multibagger-according-to-073649.html

Comments
Post a Comment