TAMILNADU ASSURED PENSION SCHEME TAPS 2026
TAMILNADU ASSURED PENSION SCHEME
TAPS 2026
01.01.2026 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!!
CLICK HERE FOR DOWNLOAD G.O PDFTAPS அரசாணை எண் 7ல் உள்ள உண்மைகள்!!
_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
தமிழ்நாடு அரசின் நிதித்துறை (PGC) அரசாணை எண் 07 நாள்.09.01.2026ன்படி தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டமான TAPS 01.01.2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி,
1. 01.01.2026 முதல் பணி நியமனம் செய்யப்படும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு TAPS கட்டாயம்.
2. 01.01.2026க்கு முன் பணியேற்று தற்போது பணியிலுள்ள அனைத்து CPS ஊழியர்களும் TAPSன் கீழ் கொண்டுவரப்படுவர்.
அவ்வாறு கொண்டுவரப்படுவோர் பணி ஓய்வின்போது அவர்களது விருப்பத்தின் பேரில்,
-> TAPS படியோ அல்லது அதற்கு ஈடாக CPSல் என்ன பெற்றிருப்பார்களோ அதன்படியோ பலன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
-> பணி ஓய்வின் போது TAPS படி பயன்பெற விரும்பினால் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
-> ஓய்வூதியத்தில் ஒரு பகுதியைத் தொகுத்துப் பெறவும் (Commutation) அனுமதிக்கப்படுவர்.
3. TAPSல் தகுதியுள்ள ஊழியரது 10% மாதாந்திர பிடித்தத்தைக் கொண்டு அவரது இறுதி மாத ஊதியத்தில் (BP+DA) 50% மாதாந்திர ஓய்வூதியமாக, வழங்கப்படும். இதற்கான கூடுதல் நிதித்தேவையை அரசு ஏற்கும்.
4. ஓய்வூதியர் இறுந்துவிட்டால், தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கு அவரது இறுதி மாத ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
5. இந்த ஓய்வூதியத்திற்கும் குடும்ப ஓய்வூதியத்திற்கும் அகவிலைப்படியானது ஆண்டிற்கு இருமுறை கூடுதலாக வழங்கப்படும்.
6. பணி ஓய்வு / பணிக்கால இறப்பின் போது ஊழியரது பணிக்காலத்தின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ.25,00,000/-ற்கு மிகாமல் பணிக்கொடை (Gratuity) வழங்கப்படும்.
7. 01.01.2026க்கு முன்னர் CPSல் ஓய்வுபெற்றோருக்கு பணிக்காலத்தின் அடிப்படையில் சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
8. மேலேகண்ட அனைத்து பலன்களுக்குமான விதிமுறைகள், அப்பலன்களைப் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள், செயல்பாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசால் தனியாக அறிவிக்கப்படும்.
10. சட்டரீதியான & கணக்கீட்டுத் தேவைகள் பூர்த்தியான பின்னர் 01.01.2026ஐ அடிப்படையாகக் கொண்டு TAPS நடைமுறைக்குக் கொண்டுவரப்படும்.
மேற்கண்டவை மட்டுமே அரசாணையில் உள்ளன. இதனையடுத்து TAPS குறித்த அனைத்து விதிமுறைகளும் முழுமையாக வெளியான பின்பு தான், யாருக்கு எதனடிப்படையில் எவ்வளவு Pension / Gratuity கிடைக்கும் என்பது தெரியவரும்.

Comments
Post a Comment