BEST SIP INVESTMENT | BEST SIP PLAN
BEST SIP INVESTMENT
BEST SIP PLAN
BEST SYSTEMATIC INVESTMENT PLAN
Article courtesy : Tamil good returns
இப்படி பிளான் பண்ணி SIP முதலீடு செஞ்சா மாசா மாசம் உங்களுக்கு ரூ.1 லட்சமா திரும்ப கிடைக்கும்!!
நேரடியாக பங்குச்சந்தைகளில் பங்குகளை ஆராய்ந்து முதலீடு செய்வதற்கு நேரமில்லை, பொறுமையும் இல்லை என்பவர்களுக்காகவே தான் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் செயல்படுகின்றன. நாம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய பணத்தை அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை பெருக்குகின்றன.
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் மாதம் தோறும் ஒரு தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது பலருக்கும் மிகச் சிறந்த முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. அதாவது ஒரு சிறு சேமிப்பு போல மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளத்தில் ஒதுக்கி வைத்து எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பின்னர் நாம் செய்த இந்த முதலீடு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து நிற்கும்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் போது சில ட்ரிக்குகளை ஃபாலோ செய்தால் எளிமையாக நம்முடைய பணத்தை பல மடங்கு பெருக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பிரபல பட்டய கணக்காளரான நிதின் கௌசிக் எக்ஸ் பக்கத்தில் எப்படி ஆண்டுக்கு 10 சதவீத வருமானம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்து 2 கோடி ரூபாய் நிதி தொகுப்பை உருவாக்க முடியும் என்பதை விளக்கி இருக்கிறார்.
எஸ்ஐபி முறையில் மாதம் 18,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், இதனை ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதம் என்ற அளவில் ஸ்டெப் அப் செய்ய வேண்டும். அதாவது ஒவ்வொரு ஆண்டும் உங்களுடைய முதலீட்டை 6 சதவீதம் உயர்த்த வேண்டும், தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு இதனை தொடர வேண்டும், உங்களுக்கு 10% ரிட்டன்ஸ் கிடைத்தால் கூட போதும் 20 ஆண்டு முடியும்போது 2 முதல் 2.5 கோடி ரூபாய் வரை நிதி தொகுப்பு சேர்ந்திருக்கும் என கூறுகிறார்.
நீங்கள் இதில் முதலீடு செய்தது வெறும் 80 லட்சம் தான் ஆனால் நீங்கள் ஒழுக்கமாக 20 ஆண்டுகாலம் தொடர்ந்து செய்த முதலீட்டுக்கு கிடைக்கக்கூடிய பரிசு தான் மீதம் இருக்கக்கூடிய 1.5 கோடி ரூபாய் என குறிப்பிடுகிறார். இந்த பணத்தை நீங்கள் ஐந்து சதவீதம் என்ற அளவில் திரும்ப பெற்றால் கூட ஒவ்வொரு மாதமும் 80,000இல் இருந்து 1 லட்சம் ரூபாயை எடுத்து பயன்படுத்த முடியும் என்கிறார். மொத்தமாக பணத்தை எடுக்க தேவையில்லை தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை அப்படியே விட்டால் அது காம்பவுண்டிங் முறையில் இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் என கூறுகிறார். இந்த முறையில் திட்டமிட்டு 30 வயதிலேயே முதலீட்டை தொடங்கினால் உங்களுடைய ஐம்பதுகளிலேயே ஓய்வு பெற முடியும் என குறிப்பிடுகிறார்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும்...
CLICK HERE INCOME TAX EXCEL CALCULATION SOFTWARE
Key words :
Best SIP investment plan with high returns
Best mutual fund SIP to invest now
SIP investment tax benefits
SIP investment calculator India
Top mutual fund companies in India
SIP investment for retirement planning


Comments
Post a Comment