MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 13.9.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  27 ♝ &   13•9•2019*

🔥
🛡இன்று தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ சார்பில் கல்வி மாவட்டங்கள் தோறும் கோரிக்கைகளை வலியுறுத்தி  மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

🔥
🛡அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் 6ம் வகுப்பு மற்றும் 7,8,9,10 ம் வகுப்புகளில் புதிதாக சேர்ந்து பயிலும் மாணவ / மாணவிகளுக்கு விலையில்லாப் புவியியல் வரைப்படம் 120 கல்வி மாவட்டங்களுக்கு வழங்குவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமான விவரம் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

🔥
🛡பள்ளிக் கல்வி - மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் மற்றும்
வைரஸ் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡மாணவர்கள் குறைவாக  உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக அதிரடி மாற்றம். விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு மாறுதல் - நாளிதழ் செய்தி

🔥
🛡பள்ளிக்கல்வி துறையில் மேல்நிலைப்பள்ளிகளில்  -2011-2012 கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட தற்காலிக பணியிடங்கள் 3 ஆண்டிற்கு தொடர் நீட்டிப்பு செய்து  ஆணை வெளியீடு

🔥
🛡கழுத்தளவு தண்ணீர்; விடுமுறை எடுத்ததே கிடையாது'-11 வருடங்களாக ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வரும் ஒடிசா மாநில  ஆசிரியை - நாளிதழ் செய்தி

🔥
🛡இடைநிற்றல் மாணவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து பள்ளிக் கல்விக்கான எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

🔥
🛡கடந்த பொதுத்தேர்வில் மெத்தனமாக விடைத்தாள் திருத்திய 1000 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

🔥
🛡கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பாடத்திட்டத்தின் படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தனித்தோவா்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தோவு நடத்தப்படும்.
இதற்கான தோவு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡அடுத்தகட்டமாக 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு விரைவில் அமலுக்கு வருகிறது - நாளிதழ் செய்தி

🔥
🛡பள்ளிக்கல்வி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

🔥
🛡தான் படித்த அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிய 'இஸ்ரோ' சிவன் இஸ்ரோ தலைவர் சிவன், சிறுவயதில் தான் படித்த அரசு ஆரம்பப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.40 இலட்சம் செலவில் மதிப்பில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு, ஸ்மார்ட் வகுப்புகள் அமைத்துக்கொடுத்துள்ளார்.

🔥
🛡ஒரு அரசு அலுவலர் உடல்நிலை சரியல்லாத காரணத்தால் VRS பெற்று கொண்டால் அவரது மகன் அல்லது மகள் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி உண்டு.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026