MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 06.09.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  20 ♝ &   6•9•2019*

🔥
🛡இன்று  ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுதல், புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெறுதல், கடந்த போராட்டத்தில் எடுத்த நடவடிக்கைகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டார அளவில் மாலை நேர ஆர்பாட்டம்

🔥
🛡தமிழக தலைமை காஜி கோரிக்கையை ஏற்று, மொஹரம் பண்டிகைக்கான அரசு விடுமுறை 10.09.2019 தேதிக்குப் பதிலாக, 11.09.2019 புதன்கிழமைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

🔥
🛡ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழகத்தில் 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் பட்டது. தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

🔥
🛡அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000/- வழங்கி ஆணை

🔥
🛡தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு DIKSHA Champion award  மத்திய அரசு விருது

🔥
🛡தமிழகத்தின் இரு ஆசிரியர் உட்பட 46 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

🔥
🛡ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரசு பள்ளியில் மின் மோட்டாரை இயக்கிய எட்டாம் வகுப்பு மாணவன் கார்த்தீஸ்வரன் உயிரிழந்ததால் பள்ளியின் ஆசிரியர்கள் கைது

🔥
🛡நேற்று (05.09.2019) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜேக் ( தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ) மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

🔥
🛡பள்ளிகளில  தேர்தல் கல்வியறிவு குழுக்களை அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்கால வாக்காளர்களான பள்ளி மாணவர்களுக்கு, தேர்தல் பாடம் கற்பிக்க, தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது

🔥
🛡விரைவில் ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? டி.ஆர்.பி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

🔥
🛡90  ஆயிரம் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு நிதி உதவியுடன் செல்போன் வழங்கப்படும் என  பள்ளிக்கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார்



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026