MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 08.03.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 மாசி 24♝ 8•3•2019*

🔥
🛡இன்று *சர்வதேச பெண்கள் தினம்* உலகெங்கும் உழைக்கும் பெண்களால் எழுச்சியோடு கொண்டாடப்படுகிறது.  பெண் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புரட்சிகர மகளிர்தின  வாழ்த்துக்கள்.

🔥
🛡ஜாக்டோஜியோ மாநிலந்தழுவிய  ஆர்ப்பாட்டம் : இன்று மாலை 5 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். பெருந்திரளாக பங்கேற்பீர்!

🔥
🛡அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும் - அரசு முதன்மைச் செயலர் அறிவுறுத்தல்.

🔥
🛡தொடக்கக் கல்வி- ஊராட்சி ஒன்றிய /நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 01.01.2019 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🔥
🛡தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்.

🔥
🛡BRC பயிற்சி அட்டவணை வெளியீடு :
Up Primary CRC - 16.3.19
Primary CRC - 23.3.19
Middle Hm Training - 25.3.19

🔥
🛡1 - 5 கையாளும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மார்ச் 12 & 13 இரு நாட்கள் கற்றல் அடைவு குறித்து வட்டார அளவிலான பயிற்சி - திருச்சி CEOவுக்கு DIET முதல்வர் கடிதம்.

🔥
🛡ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் இனி Attendance app : பள்ளிப் பார்வை செல்லும்போது அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் என தகவல்.

🔥
🛡பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி : முதல் பரிசு ரூ.10000 திண்டுக்கல் மாவட்ட தமிழ்வளர்ச்சித் துறை செயல்முறைகள்

🔥
🛡2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்த ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உத்தரவு செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡TNPSC - Departmental Exam - May 2019 Notification Published [ Exam Date : 24.05.2019 TO 31.05.2019 ]

🔥
🛡கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு மார்ச் 11 அன்று உள்ளூர் விடுமுறை -  மாவட்ட ஆட்சியர்கள்  அறிவிப்பு.

🔥
🛡TNFUSRC - தமிழ்நாடு வனத்துறை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு [ தேர்வு நாள் : ஜுன் 4வது வாரம் ]



Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION 2026-28