MENU

Show more

விநாயகரை வழிபடும் முறைகள்..

அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் *இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்*

 பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு

அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். இந்த ஆண்டு ஆவணி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை 25.08.2017 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது. பிள்ளையாரின் அவதார தத்துவம்.
ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌. பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே  ‌‌பச்சரிசியை  பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம்.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1. முல்லை இலை பலன்: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.

3. வில்வம் இலை பலன்: இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.

4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

(அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது)

5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை பலன்:  கைவரப்பெறும்.

7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை! (prayers will be for all homes!)

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026