MENU

Show more

புதிய 50ரூபாய் நோட்டு அறிமுகம்..

புதிய ரூ.50 நோட்டு விரைவில் அறிமுகம் - நன்றி தினமலர்..

Home
மும்பை: ஒளிரும் நீல வண்ணத்தில், புதிய, 50 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி:'புளோரோசென்ட்' எனப்படும், ஒளிரக் கூடிய, நீல வண்ணத்துடன் கூடிய, புதிய, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. மஹாத்மா காந்தி நோட்டுகள் வரிசையில், இது வெளியிடப்பட உள்ளது. நாட்டின் கலாசார பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், புதிய நோட்டின் பின்புறம்,கர்நாடக மாநிலம், ஹம்பியில் உள்ள கல் தேரின் படம் இடம்பெறும்.

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த நோட்டில், அசோக சின்னம், நோட்டின் முன்பக்கத்தின் வலது புறத்தில் இருக்கும். மஹாத்மா காந்தி படம், நடுவிலும், நோட்டின் வரிசைஎண், ஏறுமுகமாக அதிகரிக்கும்வகையில், மேல் இடதுபக்கத்திலும், கீழ் வலதுபக்கத்திலும் இடம்பெறும்.புதிய ரூபாய் நோட்டுகள்அறிமுகம் செய்யப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள, பழைய, 50 ரூபாய்நோட்டுகளும் செல்லும்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026