MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 30.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 16 ♝ 30•5•2019*

🔥
🛡மாணவர்களுக்கான புத்தகச் சுமையை இந்தக் கல்வியாண்டு முதல் குறைக்க  பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை.

🔥
🛡உண்மைத்தன்மை இல்லை என்று காரணம் கூறி தேர்வுநிலை, சிறப்பு நிலை அனுமதிப்பதில் காலதாமதம் கூடாது : 10 நாட்களுக்குள் அனைத்து தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை விண்ணப்பங்களை அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு

🔥
🛡கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான சிறப்புப் பிரிவினரின் இறுதிப்பட்டியல் மே 31இல் வெளியிடப்படும் -  மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவிப்பு.

🔥
🛡TRB வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனமாக நிரப்ப
 30% ஐ 50% ஆக உயர்த்தி  அரசாணை வெளியீடு.



🔥
🛡நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுவதை 70%லிருந்து 50% ஆக குறைப்பு -  அரசாணை வெளியீடு.

🔥
🛡அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குநர் நியமனம்.

🔥
🛡BT to PG Promotion Panel 2019 ( All Subject ) was published.

🔥
🛡மாணவர் விகிதாச்சாரம் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தினை இணைய தளத்தில் சரியான முறையில் பதிவேற்றம் செய்யவேண்டும் - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவுறுத்தல்.

🔥
🛡பிளஸ் 2 துணைத் தேர்வுகளுக்கான  அனுமதிச் சீட்டை இணையதளம் மூலம் புதன்கிழமை (மே 29) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.


🔥
🛡அரசுப்பள்ளிகளில் புத்தகங்கள், ஆய்வக பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட மனு ஜுன் 3க்கு  ஒத்திவைப்பு.

🔥
🛡மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை - உயர் நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡அரியர் பாடங்களை எழுத பொறியியல் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🔥
🛡கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில், பள்ளி திறப்பு அன்று மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும் என, தலைமையாசிரியர் மற்றம் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026