MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 31.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 17 ♝ 31•5•2019*

🔥
🛡SCERT - State Level Digital Assessment Workshop :  மாநில அளவில் புதிய புத்தகங்களுக்கு QR Code & E-Content தயாரிக்கும் பணிக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

🔥
🛡பள்ளி திறப்பு நாளில் மாணவர்களை வரவேற்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.

🔥
🛡உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது -  பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

🔥
🛡தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் அலைவரிசை எண் 200 ல் கல்வி தொலைக்காட்சியின்   சோதனை ஒளிபரப்பு நேற்று நண்பகல் 12 மணியிலிருந்து தொடங்கியது.

🔥
🛡தமிழகம் முழுவதும் அங்கீகாரம் பெற 2915 தனியார் பள்ளிகள்  விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தகவல்.

🔥
🛡நாமக்கல் மாவட்டத்தில் முறையான உள்கட்டமைப்பு வசதி இல்லாத 16 பள்ளிகளுக்கு (3 சிபிஎஸ்சி பள்ளிகள், 2 மெட்ரிக் பள்ளிகள், 11 நர்சரி பள்ளிகள் ) மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ்.

🔥
🛡TNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 1552 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான பட்டியலை  ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


🔥
🛡TNTET ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை உள்ளவர்களுக்கு மீண்டும் மாற்று வாய்ப்பு அளித்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

🔥
🛡ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு.

🔥
🛡நீட் தேர்வு விடைத்தாள்களை http://www.ntaneet.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இதன் விடைத்தாள்கள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

🔥
🛡தேர்தல் பரப்புரையின் போது அளித்த வாக்குறுதியின் படி எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை எம்.பி. பாரிவேந்தர் அறிவித்தார்.
பெரம்பலூரில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 50 மாணவர்கள் வீதம் 300 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெறலாம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026