MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 20.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 6 ♝ 20•5•2019*

🔥
🛡பிளஸ்2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு(பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிதழில் அறிவிப்பு  வெளியாகியுள்ளது

🔥
🛡மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம்   தமிழகத்தில் செயல்படும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின்  பட்டியலை  மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து 595 பேர் மரணம் அடைந்துள்ளனர் . 213 பேர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருவருக்கு கூட ஓய்வூதியம் வழங்கப்பட வில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல்

🔥
🛡சாதி ,மதம் இல்லா மாணவர்கள்-கேரளா.  சாதனையின் முன்னோடி. இவ்வாண்டு மட்டும் 1,24,630 மாணவர்கள் சாது,மதம் குறிப்பிடாமல் கல்வி கற்க உள்ளனர்.

🔥
🛡நமது கல்வி தொலைக்காட்சியில் , இசை மற்றும் வர்ணனையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களைக் கண்டறியும் தேர்வு வரும் 20.05.2019 திங்கள் முதல் கல்வி தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் (சென்னை) நடை பெற உள்ளது.

🔥
🛡வடமாநிலங்களில் நடைப்பெற்ற  நீட் தேர்வு மோசடிகள் -அம்பலப்படுத்திய டைம்ஸ் ஆஃப் இந்தியா  - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு வழங்கிய இலவச, 'லேப் டாப்'களை மாணவர்கள் பயன்படுத்துகின்றனரா, விற்று விட்டனரா' என, கணக்கெடுக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள, அரசு மாநகராட்சி பள்ளியில், போக்குவரத்து போலீசார் துாய்மைப் பணியில் ஈடுபட்டதை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.- நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர், அலுவலர்கள் காலிபணியிடங்களை தெரிவிக்க தொடக்க கல்வி இயக்குனர் கருப்பச்சாமி அவர்கள்  உத்தரவிட்டுள்ளார்

🔥
🛡விழுப்புரம் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்த போதும் தமிழகத்தில் கடைசி இடத்தில் பின்தங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அரசுபள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் குறைந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர்

🔥
🛡இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்த்திடும் வகையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 % மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28