MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 20.6.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 ஆனி 5 ♝ 20•6•2019*


 🔥
🛡தொடக்கக்கல்வி- சார்நிலைப்பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2019 நிலவரப்படி  வட்டாரக் கல்வி அலுவலர் பணியிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் நியமனம் செய்யத் தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் - வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் கோருதல் - சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.


🔥
🛡தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வழங்கப்படாததை கண்டித்து டிபிஐயில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை - நாளிதழ் செய்தி

🔥
🛡மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும்  5 ஆண்டுகளிலும் தலா 25% உயர்த்திக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10% இந்த ஆண்டே ஒதுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  - நாளிதழ் செய்தி

🔥
🛡எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 503 எம்.பி.பி.எஸ், 15 பி.டி.எஸ். இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு செய்வதற்கு ஜூன் 24-ம் தேதி கடைசி நாளாகும்

🔥
🛡சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் (கெளரவ விரிவுரையாளர்) பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியீடு. மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 75. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.

🔥
🛡பள்ளிகளில் ஜூன் 21-ம் தேதி யோகா தினம் கொண்டாட மத்திய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்துவிதமான பள்ளிகளிலும் யோகா தினத்தை நிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியம்உட்பட போட்டிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

🔥
🛡பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர்கள்  பணியை தக்கவைக்க 15 மாணவர்களை சேர்த்துவிட நிர்பந்தம்  - நாளிதழ் செய்தி.

🔥
🛡கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 18,438 பேர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல்அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது

🔥
🛡ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் - இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

🔥
🛡மாணவர்களின் வருகையை online-ல் பதிவு செய்யாத தலைமை ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை - விழுப்புரம் CEO

🔥
🛡Kalvi TV Mobile App - பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி தற்போது மொபைல் ஆப் ஆக பிளே ஸ்டோரில் வெளியீடு

🔥
🛡தமிழகத்தில்  வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡விளையாட்டு பாடவேளைகளில் மாணவர்களை தலைமையாசிரியர்கள் விளையாட அனுமதிக்க  வேண்டும் என  புதுக்கோட்டை
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28