MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 13.6.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 வைகாசி 30 ♝ 13•6•2019*


🔥
🛡LKG & UKG வகுப்புகளுக்கு புதிய  ஆசிரியர்கள் விரைவில் நியமனம்: முதலில், தொடக்க பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள்  எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு பாடம் எடுக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதும்  எல்.கே.ஜி.,க்கு தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். எனவே, தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் அச்சப்பட வேண்டாம் -
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡7 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் திடீர் பணியிட மாற்றம் :
பள்ளி கல்வித்துறை நடவடிக்கை - அரசாணை வெளியீடு.

🔥
🛡1.1.2018 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

🔥
🛡நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள் வெளியீடு.

🔥
🛡CPS Account Slip :  2018 - 2019ஆம் ஆண்டுக்கான கணக்கு தாட்களை 14.6.19 முதல்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

🔥
🛡தகுதியற்ற பேராசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்ய அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் UGC உத்தரவு.

🔥
🛡PG TRB தேர்வு அறிவிப்பு வெளியீடு : 2144 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு விரைவில் நடைபெறும்.

🔥
🛡அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாகஇடம்பெற செய்ய  வேண்டும் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் திட்டவரைவு தாக்கல்.

🔥
🛡அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது, மாவட்ட கருவூல அலுவலகங்களில், தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு.

🔥
🛡EMIS - வலைத்தளத்தில் புதிய மாணவர்களின் சேர்க்கை, வேறு பள்ளியிலிருந்து பெறப்பட வேண்டிய மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்வதில் இருந்த பிரச்சினை தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.


🔥
🛡ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு கிடையாது,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

🔥
🛡2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில்நுட்ப கல்வி துறையினால் நடத்தப்படும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பப்படிவத்தை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் 13.6.2019 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்  ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20-ம் தேதி கடைசி நாள்

🔥
🛡கடந்த ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28