MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 17.6.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2050 ஆனி 2 ♝ 17•6•2019*


🔥
🛡தமிழகத்தில் எந்த பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தாலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம்  தற்காலிக ஆசிரியரை நியமிக்கலாம் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 20க்கு மாற்றம் -  உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.

🔥
🛡எழுத படிக்க தெரியாத மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் கட்டகம் வாயிலாக சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித்துறை உத்தரவு : குறைதீர் கற்றல் கட்டகங்கள் வழங்கப்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு தினம்தோறும் மதியம் 1-  1.30 மணி வரையும், மாலை 3.30 - 4 மணி வரையும் குறைதீர் கற்பித்தல் சிறப்பு பயிற்சி ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

🔥
🛡பயோமெட்ரிக் முறையை விரிவுபடுத்தும் வரை ஆப்பில் வருகை பதிவு :  பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

🔥
🛡எம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் :
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் ஆணை வழங்கியது.

🔥
🛡EMIS - மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை 18.06.2019 க்குள் உள்ளீடு செய்து முடிக்க வேலூர் CEO  உத்தரவு.

🔥
🛡தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1995 முதல் 1998 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் போலி கையெழுத்திட்டு  விதிகளுக்கு புறம்பாக 42 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டன - நாளிதழ் செய்தி


🔥
🛡தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - நாளிதழ் செய்தி

🔥
🛡தண்ணீர் பற்றாக்குறை குறித்து திங்கட்கிழமை முதல்  அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு பணி நடைபெறும் என  அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்

🔥
🛡நீட் தேர்வு விடைத்தாள் குளறுபடியில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது.

🔥
🛡குரூப்-4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய வழக்கில் ஜூன் 26ம் தேதிக்குள் பதில் அளிக்க டி.என்.பி.எஸ்.சி-க்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28