MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion105 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education958 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS1 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 13.6.19

*பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.06.2019*

*திருக்குறள்*

*அதிகாரம்*
*ஒப்புரவறிதல்*
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

*விளக்கம்*

ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.

*பழமொழி*
A Penny saved is a Penny earned

ஒரு காசு பேணின், இரு காசு தேறும்

*இரண்டொழுக்க பண்புகள்*
1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

*பொன்மொழி*
யாருடைய உயர்நிலையையும் நாம் விரும்ப வேண்டாம். நாம் அதற்கு ஒருபடி மேலான நிலையை அடைவது என உறுதிக் கொள்வோம்.
- விவேகானந்தர்

 *பொது அறிவு*
1. அமெரிக்க  இந்திய வர்த்தக சபை வழங்கும் 'குளோபல் லீடர்ஸ்' விருதுக்கு இந்த ஆண்டு தேர்வாகியுள்ளவர் யார்?

திரு.சுந்தர்பிச்சை(கூகுளின் தலைமைச் செயலதிகாரி, தமிழகத்தைச் சேர்ந்தவர்)

2. உலகிலேயே மிக வேகமாக பேசக்கூடிய மொழி எது?

பிரெஞ்சு

*English words & meanings*
Doll - a child's toy, பொம்மை

Dairy - storage place of milk and milk products, பால் பண்ணை

*ஆரோக்ய வாழ்வு*
வாரம் ஒருமுறையாவது உணவில்  புராேக்காேலியை சேர்த்துக்காெண்டால் அது உடலில் உள்ள இரத்தத்தை சுத்தமாக்குவதாேடு பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநாேயை விரட்டும் முதல் மருந்தாகவும் அமைகிறது.

*Some important  abbreviations for students*
* LR - Logical Reasoning

 * MAT - Management Aptitude Test

*நீதிக்கதை*
"சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார்.

“ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார்.

“பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல்.
“பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது.

 தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.
அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.
“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.
“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல்.
“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.
மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன்கொப்பூழ் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.
அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.
 உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.
வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.
வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.
தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.
சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.

*வியாழன்*

அறிவியல் & கணினி

எளிய அறிவியல் சோதனை

பலூனும் பாட்டிலும்
1. ஒரு வாய் குறுகிய பாட்டில் எடுத்து கொள்ளவும். சிறிது நீர் நிரப்பி அதை கொதிக்கும் நீரினுள் வைக்கவும்
2. பாட்டிலில் உள்ள நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது அதை எடுத்து ஒரு மர மேசை மீது வைக்கவும்
3. இப்பொழுது அதன் வாயில் ஒரு பலூனை மாட்டவும்.
4. கவனிக்க. முதலில் பாட்டிலில் நீர் துளிகள் தோன்றும் பின்னர் பலூன் உள்ளே சென்று விடும்
காரணம் பாட்டில் மற்றும் வளிமண்டலத்தில் உள்ள அழுத்த வேறுபாடு ஆகும்.

*தொழில்நுட்பம்*

ஆங்கிலம், அடிப்படை கணிதம், மற்றும் விளையாட்டுகள் அடங்கிய ஒரு அற்புதமான செயலி

Khan academy kids...

இதனை install செய்து பயன்படுத்துவது எப்படி என்பதற்கான வீடியோ மேலே உள்ள லிங்க்கில்

*இன்றைய செய்திகள்*

13.06.2019

* எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப்படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 19-ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.

*  ஜூலை மாதம் 15ம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

* அரபிக்கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* 24 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

* உலக கோப்பைக் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தயாசத்தில் வீழ்த்தியது.

*Today's Headlines*

* Dates for the All India Allocation counselling for MBBS and BDS Medical Examinations have been announced. The first phase of counseling is  take place on June 19.

* In the morning of 15th of July, at 2.51 pm Chandraayan II will be launched. ISRO director  Sivan official announced.

* Vayu storm in the Arabian Sea has become a storm of storm: the Indian Meteorological Survey announced.

* Women's  World Cup football tournament is taking place in France. In yesterday's league game, the Netherlands team defeated the New Zealand by 1-0.

* World Cup Cricket:Australia defeats Pakistan by 41 runs.

Comments

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ELECTION TRAINING MODULES 2024

ELECTION MODEL FORMS 2024

PMS GELS 2024 APP