MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 4.8.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆடி 19♝ 04•08•2018*

🔥
🛡 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வில் ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்கள் போக
மீதம் உள்ள 364 காலி பணியிடத்திற்கு திருத்தப்பட்ட புதிய பட்டியலின்படி  இன்று கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

🔥
🛡 கல்வித் துறையில் பணியாற்றும் காலமுறை பணியாளர்களை நிரந்தரமாக்க ஆலோசனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


🔥
🛡 பள்ளி சீருடையில் வந்தாலே அரசு பஸ்சில் இலவச பயணம். மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் அறிவுரை


🔥
🛡சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 8.8.18 அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

🔥
🛡 ஆடிப்பூரத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்டு 13 அன்று விடுமுறை - காஞ்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. அதற்கு பதிலாக செப்டம்பர் 8 சனிக்கிழமை  வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

🔥
🛡 B.Ed கற்பித்தல் பயிற்சி வரும் மாணவர்களிடம் வகுப்புகளை கொடுத்துவிட்டு ஆசிரியர்கள் ஓய்வு எடுக்க கூடாது - திருவண்ணாமலை CEO அறிவுறுத்தல்

🔥
🛡
அரசு அலுவலகங்களில் பெறப்படும் கோரிக்கை மனுவினை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும். தலைமை செயலாளர் அரசாணை வெளியீடு!!!


🔥
🛡முகவரிக்கான முறையான சான்றுகள் இல்லாதவர்களும் PIN நம்பர் மூலம் ஆதார் அட்டை பெறும் வசதி வரும் ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று ஆதார் ஆணையம் அறிவிப்பு

🔥
🛡
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச்சலனம் தொடரும் காரணத்தினாலும், அடுத்த 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு.

🔥
🛡 கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் வட்டாரக் கல்வி அலுவலர்களே. அவர்களின் பெயரிலான பணப்பலன் உண்டியலை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் 2.8.2018 தேதியிட்ட அரசுக் கடித எண்.18539/தொ.க1(1)/2018-1-ல் கருவூலகத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

🔥
🛡பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு எழுதியோரில், விடைத்தாள் நகல் கேட்டவர்களுக்கு, இன்று பகல், 2:00 மணிக்கு, scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது

நன்றி : TNPTF 

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28