MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 31.8.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆவணி 15♝ 31•08•2018*

🔥
🛡 அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை. அனைத்து சான்றிதழ்களிலும் பிறந்ததேதி ஒன்றாக இருக்க வேண்டும்.

🔥
🛡 நல்லாசிரியர் விருதுக்கு காவல்துறையின்  தடையின்மை சான்று அவசியம். ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள், புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என எழுத்துப்பூர்வ அறிக்கை தேவை.

🔥
🛡 வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே  கடைசி நாள்; வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரிக்கை.

🔥
🛡DGE - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - புதிய தேர்வு மையங்கள் அமைத்தல் - கருத்துரு அனுப்புதல் தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்

🔥
🛡 TamilNadu Unemployed B.Ed. Computer Teachers  Association wants priority in selection to 800 posts - Paper News.

🔥
🛡
போலியாகத் தயாரிக்க முடியாது ..பாதுகாப்பு... என்றெலாம் கூறப்பட்ட ரூ.500, ரூ.2000 நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தகவல்.

🔥
🛡 கூட்டுறவுச் சங்க தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டாம். இதனால் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள் - நீதிபதி எச்சரிக்கை.

🔥
🛡 நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் தரமுடியாது என்று திட்டவட்டமாக மறுப்பு.

🔥
🛡 குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் சிறிய வகை ரோபோவை அறிமுகப்படுத்தி, கல்வியில் சீனா புதுமையை புகுத்தியுள்ளது. இதற்கு 'கீகோ' என பெயரிடப்பட்டுள்ளது

🔥
🛡ஜம்மு மற்றும் காஷ்மீரில் திடீர் ஆய்வு செய்ததில் பணிநேரத்தில் அலுவலகங்களில் இல்லாத 48 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

🔥
🛡 தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான
கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை -  அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

🔥
🛡 பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பணியிலிருந்து முறையான கண்காணிப்பாளராக பணிமாறுதல் கலந்தாய்வு குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்

🔥
🛡 புதிதாக வாங்கப்படும் கார் மற்றும் பைக்குகளுக்கு அளிக்கப்படும் இன்சூரன்ஸ் கால வரம்பை அதிகப்படுத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡 தருமபுரி மாவட்டம் மாரவாடி அருகே சத்தியத்தை மீறி தந்தை மது குடித்ததால் அவரது மகள் (9ம் வகுப்பு)  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

🔥
🛡 மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட பட்டியலில், இந்தியாவில் உள்ள மாசுபாடு
நிறைந்த நகரங்களில் சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔥
🛡 வதந்திகள் பரவுவதைத் தடுக்க வானொலியைப் பயன்படுத்த வாட்ஸ் ஆப் திட்டம்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026