MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 28.6.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆனி 14 ♝ 28•06•2018*


🔥
🛡அரசு கலை கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  விநியோகம் தொடங்கியது.  விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஜூலை 9 கடைசி நாளாகும். கூடுதல் விவரங்களை www.tn.gov.in  என்ற இணையதளத்தில் பெறலாம்.

🔥
🛡 கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் வகையில் கேள்வித் தாள்களை
மின் அஞ்சல் மூலமாக தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்க CBSE முடிவு .

🔥
🛡எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவிப்பு.

🔥
🛡தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து நடத்தும்
மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்கலாம். ஜுலை 10 முதல் போட்டிகள் ஆரம்பம்.

🔥
🛡பல்கலைகழக மானிய குழுவை (UGC) கலைத்து புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு.
பல்கலை கழக மானியக் குழுவுக்கு பதிலாக உயர்கல்வி கவுன்சில் (HEC) உருவாக்கப்படும் இது தொடர்பாக வரும் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும்-  மத்திய அரசு அறிவிப்பு.

🔥
🛡தமிழக அரசு கல்லூரிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு 110 விதியின்கீழ் முதல்வர் ஆணையின்படி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான அரசாணை 120 வெளியீடு.

🔥
🛡நீட்'தேர்வு மாநில ஒதுக்ககீட்டிற்கான  தரவரிசை பட்டியல் இன்று  வெளியாகும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தகவல்.

🔥
🛡இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று வெளியாகிறது.

🔥
🛡TNPSC - குரூப்-4 தேர்வு முடிவுகள் ஜுலை இறுதியில் வெளியாகும் என அறிவிப்பு!

🔥
🛡குறைந்த மதிப்பெண் எடுப்பதால், தனியார் பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும்
மாணவர்கள், அரசு பள்ளிகளில் இடம் கேட்டு, தஞ்சம் அடைந்துள்ளனர்.- நாளிதழ் செய்தி

🔥
🛡அறிவியல் புத்தாக்க விருத்துக்கான இணைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஜீன் 30 தேதியிலிருந்து ஜீலை 31 என நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. INSPIRE AWARD 2018 - LAST DATE FOR ONLINE ENTRY IS 31.07.2018

🔥
🛡திருத்தப்பட்ட ஆசிரியர்- மாணவர்கள் விகிதாச்சாரங்களுக்கு
ஏற்ப கல்லூரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் குறைக்கக்கூடாது என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

🔥
🛡ALM, TLM, Mindmap, பதிவேடுகள்  முறையாக பயன்படுத்தவில்லை என ஒரே பள்ளியில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ - இராமநாதபுரம் CEO நடவடிக்கை.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28