MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 26.6.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 ஆனி 12 ♝ 26•06•2018*


🔥
🛡உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
 2018-19-ல் அரசுக் கலை கல்லூரிகளில் 75 இளங்கலை, 53 முதுகலை, 65 எம்.ஃ.பில் , 71 பிஎச்டி படிப்புகளில் புதிய பாடப்பிரிவுகளை துவக்கவும் மற்றும் முதற்கட்டமாக 693 பணியிடத்தில் 270 புதிய உதவிப்பேராசிரியர்கள் பணியிடம் நிரப்பவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡ஜுன் /ஜுலை2018     +1 சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் 28.6.2018 முதல் dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம்.

🔥
🛡புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளித்தது-அலுவலர்களின் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் கோருதல் சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.

🔥
🛡 அறிவியல் கருத்தரங்கம் - 2018 | பள்ளிகளில் நடத்துதல் சார்பாக பள்ளி கல்வி  இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡MBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

🔥
🛡TRB - சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது? என கோரிக்கை எழுந்துள்ளது.

🔥
🛡TRB - TNTET 2017 இரண்டாம் தாளின் எழுதியவர்களின்  மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡11 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில்
20 விழுக்காடு வினாக்கள் சிந்தனை மற்றும் உயர் திறன் சார்ந்து சிந்தித்து விடையளிப்பவையாக இருக்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

🔥
🛡கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு
கேரள அரசின் கல்வித்துறை தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளால் தனியார் பள்ளிகளின்
மாணவர் சேர்க்கையைவிட அரசுப் பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

🔥
🛡கலை பண்பாட்டுத்துறை அரசு இசைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் இசை ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡பீகார் மாநிலத்தில் பழைய பேப்பர் கடையில் 10-ஆம் வகுப்பு விடைத்தாள்கள் - நாளிதழ் செய்தி

🔥
🛡அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளில்  ஜீன் 21 இல் நடைபெற இருந்த பதவி உயர்வு கலந்தாய்வு திடீர் ரத்து : இடைநிலை ஆசிரியர்கள் ஏமாற்றம் - நாளிதழ் செய்தி

🔥
🛡10,11&12 வகுப்புகளில் காலை மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகளில் மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்தி வருகைப் பதிவேடு பராமரிக்க வேண்டும் - விழுப்புரம் CEO சுற்றறிக்கை.

🔥
🛡CPS திட்டம் என்னாச்சு? அறிக்கையை தாக்கல் செய்யாமல் காலாவதியான வல்லுனர் குழு - RTI தகவல்.

🔥
🛡செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையை சேர்ந்த பிரக்னாநந்தா என்ற சிறுவன் பெற்றுள்ளார்.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28