MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 14.6.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 வைகாசி  31 ♝ 14•06•2018*

🔥
🛡அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

🔥
🛡தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள், பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

🔥
🛡தமிழகத்தில் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்று கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.

🔥
🛡அக்டோபர் முதல் கருவூலங்கள் ஆன்லைன் மயமாவதால் அரசு துறையில் காகித சம்பள பட்டியல் இனி இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🔥
🛡ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 26ல் துவங்குகிறது.

🔥
🛡முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணியாக சென்ற போது  கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

🔥
🛡மனோன்மனியம் பல்கலை.,யில் தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது : துணைவேந்தர் அறிவிப்பு

🔥
🛡மாணவர்களுக்கு எளிதாக கற்பிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு 15 நாள் பயிற்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் : பள்ளி கல்வித்துறை அமைச்சர் தகவல்.

🔥
🛡முதுகலை ஆசிரியர்களின் பணி முன்னுரிமை TRB தர எண் அடிப்படையில் கணக்கிடப்படுவதே விதிகளின்படி சரி - RTI மூலம் பதில்

🔥
🛡வழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது எப்படி?- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி; விரைந்து பயிற்சி அளிக்க கோரிக்கை

🔥
🛡ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது  நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு.

🔥
🛡கல்லூரி,பல்கலைக்கழக பேராசிரியர்களின் பதவி உயர்வில் புதிய நடைமுறை அறிமுகம். தேர்வுகள் மூலமே இனி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு.

🔥
🛡புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சப்பாத்தி, இனிப்பு வகைகள்  வழங்க அடுத்த இரண்டு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்  என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்....

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK