MENU

Show more

TNPTF -கல்விச் செய்திகள் 4.5.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 சித்திரை 21 ♝ 04•05•2018*


🔥
🛡டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றம்,மற்ற மாநிலங்களில் இல்லாத சிறந்த பாடத்திட்டம் - பள்ளிக்கல்வி செயலர் த.உதயச்சந்திரன் IAS பெருமிதம்

🔥
🛡நீட் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட வெளிமாநில மையங்களிலேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.
உயர்நீதிமன்ற தடையை எதிர்த்த
CBSE - இன் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🔥
🛡ஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை - நாளிதழ் செய்தி.

🔥
🛡CPS திட்டத்தில் 2018 -19 நிதிதாண்டின் முதல் நான்கு மாதத்திற்கு வட்டி 7.6% நிர்ணயித்து அரசாணை வெளியீடு.

🔥
🛡மழலையர் பள்ளிகளில் (Play Schools) படிக்கும் மாணவர்களை மதிப்பிடும் வரைவு விதிமுறைகளை NCERT எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தயாரித்துள்ளது.

🔥
🛡பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் தேர்வு ரத்து தொடரும் என தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡ஊதிய முரண்பாடுகளைக் களையாவிட்டால் ஜூன் 8ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

🔥
🛡கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு வங்கிகளில்
சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை உள்ளடக்கிய 23,000க்கும் அதிகமான வங்கிக் கடன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல்

🔥
🛡தமிழகத்தில் இடி, மின்னல் உடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

🔥
🛡தமிழக பள்ளிகளில் புதிய பாடப்புத்தகம் e- book முறையிலும் வெளியிடப்படும் - இயக்குனர்  அறிவிப்பு

🔥
🛡இருதரப்பினரிடையே சமூக வலைதளத்தில் தவறாக செய்தி பரப்பிய விவகாரத்தில் 
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 
5 அரசு பள்ளி ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' - DEEO அதிரடி உத்தரவு - நாளிதழ் செய்தி

🔥
🛡காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாத மத்திய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவிரி தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

🔥
🛡கத்திரி வெயில் இன்று துவக்கம் - 24 நாட்கள் வறுத்தெடுக்கும்

🔥
🛡10 லட்சத்திற்கு மேல் அசையா சொத்தை வாங்குபவர்கள்& விற்பவர்கள் தத்தமது PAN எண்ணை அளித்தால் மட்டுமே இனி பத்திர பதிவு செய்ய முடியும் - பதிவுத்துறை புதிய விதிமுறை அமல்.

செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026