MENU

Show more

TSP NEWS 11.5.18

இன்றைய செய்தித்தாள் செய்திகள் 
11-5-2018

*ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

*வடமாநிலத்தவர் மீது தாக்குதல் : 'வதந்தி பரப்பினால் குண்டர் சட்டம் பாயும்'

குழந்தை கடத்துவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி எச்சரித்துள்ளார்

*பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து: 9 பேர் பலி

பெரம்பலூர் அருகே இரு கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

*உதகை படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமை

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்திய காட்டெருமையை வனத் துறையினர் வியாழக்கிழமை
விரட்டினர்.

*மக்களோடு இணைந்து பணியாற்றும் உணர்வை சா.கணேசனிடமிருந்தே பெற்றேன்: மு.க.ஸ்டாலின்

மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை மறைந்த முன்னாள் மேயர் சா.கணேசனிடம் இருந்தே பெற்றேன் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

*ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடத் தேர்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

*திரைப்படக் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

திரைப்படக் கல்லூரியில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

*போலீஸார் தற்கொலை விவகாரம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பணிச் சுமையின் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு போலீஸார் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து கேள்வி எழுப்பிய

*14-இல் விஐடியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

விஐடி சென்னை, வேலூர், போபால், அமராவதி ஆகிய இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக விஐடி துணைத் தலைவர்

*போளூர் அருகே பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 25 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களியம் கிராமத்தில் குழந்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என நினைத்து பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 25 பேரை போலீஸார் வியாழக்கிழமை

*ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரத்திலேயே தடையில்லா சான்று: சிற்பிகள் கோரிக்கை

ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திலேயே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த சிற்பிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

*விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் : டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடமிருந்து, அபராதத்தை பணமாக பெறுவதைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பெறும் புதிய நடைமுறையை சென்னை மாநகர

*பி.இ. மாணவர் சேர்க்கை கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ஏன் ரொக்கமாகப் பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

*தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு

பருவமழை தொடங்கவுள்ளதால், முல்லைப் பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்புக் குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

*'காலா' படத்தை வெளியிட தடை விதிக்க மறுப்பு

'காலா' திரைப்படத்தை கரிகாலன் என்ற அடைமொழியுடன் வெளியிட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

*அப்பாவிகள் அடித்துக் கொலை: காவல் துறை பொறுப்பேற்க வேண்டும்

குழந்தை கடத்துபவர்களாகச் சந்தேகித்து அப்பாவிகள் அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களுக்கு தமிழகக் காவல் துறை பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

*இ-சேவை மையங்களில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த மின்னணு குடும்ப அட்டைகள் பணி ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

*செல்லிடப்பேசியில் பேசியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு நூதன தண்டனை

செல்லிடப்பேசியில் பேசியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்குப் போக்குவரத்து சிக்னலில் ஒருநாள் முழுவதும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணி வழங்கி நூதன தண்டனை அளிக்கப்பட்டது.

*மாநிலத்தின் மீது பற்றிருந்தால் என்னுடன் இணைந்து செயல்படுங்கள்: புதுவை முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு

புதுவை மாநிலத்தின் மீது உண்மையான பற்றிருந்தால், என்னை பதவி விலக கட்டாயப்படுத்துவதை விடுத்து, என்னுடன் இணைந்து

*பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கோரி மனு

மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில்

*நகைச்சுவை நடிகர் நீலு காலமானார்

மூத்த நாடக, திரைப்பட நடிகர் நீலு என்கிற த. நீலகண்டன் (82) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானார் .

*நெடுவாசலில் வெடி வெடித்து மக்கள் கொண்டாட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலுக்கு பதில் மாற்று இடம் கேட்டுள்ள தனியார் நிறுவனத்தின் முடிவை வரவேற்று அப்பகுதியினர் வெடிவெடித்து கொண்டாடினர்.

*குட்கா ஆலை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ.வுக்கு முன்ஜாமீன்

குட்கா ஆலை அருகே போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக்குக்கு முன்ஜாமீன் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

*மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

*காவலர் ஜெகதீஸ் துரை கொலை வழக்கு: 4 பேர் கைது

நான்குனேரி அருகே மணல் கடத்தல் கும்பலால் தனிப் பிரிவு காவலர் ஜெகதீஸ் துரை கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

*கோவையில் முதல் மாநில மாநாடு: ரஜினி திட்டம்

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கோவையில் முதல் மாநில மாநாட்டை நடத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

*காங்கேயம் காளைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யுங்கள்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

காங்கேயம் காளைகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு

*கைவிடப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: வைகோ வரவேற்பு

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட உள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்புத் தெரிவித்துள்ளார்.

*ரமலான் நோன்பு கஞ்சி: பள்ளிவாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி

ரமலான் பண்டிகையை ஒட்டி, பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்க 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசியை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

*குட்கா: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு: அன்புமணி கண்டனம்

குட்கா ஊழல் வழக்கு குறித்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

*தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நெல் கொள்முதல் குறைவு: வெளி மாநிலத்தில் அரிசி வாங்க நடவடிக்கை

டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக நெல் கொள்முதல் குறைந்துவிட்டதால், வெளி மாநிலத்தில் அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

*குவாரிகளில் மணல் அள்ளும் இயந்திரங்களில் சிசிடிவி கேமரா பொருத்தம்: நீதிமன்றத்தில் அரசு தகவல்

மணல் குவாரிகளில் ஒவ்வொரு பொக்லைன் இயந்திரத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஒரு மீட்டர் ஆழத்தில் மட்டும் மணல் அள்ளப்படுகிறதா ? என்று கண்காணிக்கப்படுகிறது

*சாத்தனூர் அணையிலிருந்து மே 14 முதல் நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையிலிருந்து மே 14-ஆம் தேதி முதல் நீர் திறக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

*காவிரி: 14-இல் செயல் திட்டம் தாக்கல்: நீர்வளத்துறை செயலர் தகவல்

உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, மே 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல் திட்ட அறிக்கை

*ரூ. 27,450 கோடியில் நரிமணத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

நாகப்பட்டினம் மாவட்டத்தில், காவிரிப் படுகையான நரிமணத்தில் ரூ.27, 450 கோடியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் (சிபிசிஎல்) அமைக்க

*நிர்மலாதேவி விவகார அறிக்கை: பகிரங்கமாக வெளியிட தடை

கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான சந்தானம் குழுவின் அறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிக்கலாம்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28