MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 11.5.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*


*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2049 சித்திரை 28 ♝ 11•05•2018*

🔥
🛡20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் : ஜாக்டோ - ஜியோ எச்சரிக்கை  - நாளிதழ் செய்தி

🔥
🛡திருவண்ணாமலையில், சிறப்பு வகுப்புக்கு மாணவர்களை அழைத்து சென்ற, தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்ததில், 20 மாணவர்கள் காயமடைந்தனர்.

🔥
🛡கல்வி அமைச்சரின் கருணைக்கு
RTE - Act ல்  சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.- நாளிதழ் செய்தி

🔥
🛡நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க  தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

🔥
🛡மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில் இருந்து தலா 2 ஆயிரம் ரூபாயை பள்ளியின் வளர்ச்சிக்கு ஒதுக்கி 7 ஆசிரியர்கள் அர்ப்பணிப்பால் உயர்ந்த  திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திரம் அரசு நடுநிலைப் பள்ளி

🔥
🛡அடுத்த சாதனைக்கு தயார்! மாணவர்கள் ஆங்கில வாசிப்புத்திறன் ஊக்குவிக்க திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை  - நாளிதழ் செய்தி

🔥
🛡பகுதிநேர ஆசிரியர்கள் படும் இன்னல்கள் - கோரிக்கையை நிறைவேற்றுமா தமிழக அரசு

🔥
🛡தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்  நடத்தும்  ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு  இணையதளத்தில் வெளியீடு.
www.tnpscexams.netல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

🔥
🛡10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறை அறிமுகம்;  தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

🔥
🛡தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 4ம் தேதி கூடும்; அப்போது துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும். இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும் - சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல்

🔥
🛡நேரடி இரண்டாம் ஆண்டு பி.இ. சேர்க்கை: இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அரசு உத்தரவு.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நடைமுறைகள் மே 18-இல் தொடங்கும். ஜூன் 14-இல் பதிவு நடைமுறைகள் நிறைவடையும்.

🔥
🛡கேரளா அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த 5 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை.

🔥
🛡நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு ;  வேறு இடம் ஒதுக்குமாறு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்.

🔥
🛡குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வந்த  வதந்தியால் இருவர் அடித்துக் கொலை; இது போன்ற வதந்திகளை சமூக வலைதளத்தில்  பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்  -  காவல்துறை எச்சரிக்கை.


செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்...

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026