MENU

Show more

முதல்வர் ஜெ

5 வது முறை ஜெ., இன்று பதவியேற்றார்; ஒட்டு மொத்தமாக உறுதி எடுத்த அமைச்சர்கள்

சென்னை: தமிழக முதல்வராக ஜெ., இன்று காலை பொறுப்பேற்றார். கவர்னர் ரேசாசையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜெ., மட்டும் தனியாக பதவியேற்று கொண்டார். நேரம் கருதி 14, பதினான்காக இரண்டு அணியாக மொத்தமாக உறுதிமொழி எடுத்து கொண்டனர். .

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அ.தி.மு.க., தொண்டர்கள் சென்னை மெரீனாகடற்கரையில் குவிந்துள்ளனர். கூட்டம் அதிகம் வந்ததால் இப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.



சென்னை பல்கலை., நூற்றாண்டு விழா மண்டபத்தில் இந்த விழா நடக்கிறது. ஜெ., வை வரவேற்கும் வகையில் சென்னை முக்கிய சாலைகள் முழுவதும் மெகா பிளக்ஸ்போர்டுகள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.


பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். காலை 10 .30 மணிய ளவில் ஜெ., போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார்.
நடிகர்கள் பங்கேற்பு : விழாவில் நீதிபதிகள், நடிகர்கள், ரஜினி, பிரபு, சரத்குமார், எம். எம். ராஜம் , போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்றே்றனர். மத்திய அமைச்சர் பா.ஜ., தரப்பில் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா பங்கேற்றனர்.



பத்து , பத்தா உறுதி மொழி எடுத்துக்கோ:
பதவியேற்பு நிகழ்ச்சியை 30 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்பதால், அமைச்சர்கள் 14 பேராக கூட்டாக உறுதிமொழி எடுத்தனர். அனைவரும் ஜன, கன மன என பாடியது போல் ஒட்டு மொத்தமாக உறுதிமொழி எடுத்தனர். இன்னாராகிய நான் என்று மட்டும் அனைவரும் பெயரை உச்சரித்து பின்னர் உறுதிமொழியை மொத்தமாக படித்தனர், இது போன்று எவ்வித பதவியேற்பிலும் நடந்தது கிடையாது.


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026