MENU

Show more

ப்ளஸ் 2 CUT OFF கணக்கிடுவது எப்படி

🌻🌻🌻🌻🌻🌻🌻
சமச்சீர், சி.பி.எஸ்.இ., 'கட் - ஆப்' கணக்கீடு எப்படி?அண்ணா, கால்நடை மருத்துவ பல்கலை அதிகாரிகள் தகவல்
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில், இன்ஜினியரிங், கால்நடை மருத்துவ படிப்புகளில், பல்வேறு முறைகளில், 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.

l மாநில கல்வித் துறையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கு, மொழிப்பாடம் அல்லாத முக்கியப் பாடங்களின் மதிப்பெண் மட்டும், 'கட் - ஆப்' மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படுகிறது.

l சமச்சீர் கல்வி முடித்தவர்களுக்கு, இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு, மூன்று பாடங்களின் மொத்த மதிப்பெண்ணை, மொத்தம், 200 மதிப்பெண்களுக்கு கணக்கிடுவர்.

l அதாவது, இன்ஜினியரிங் படிப்புக்கு, கணிதத்தில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, இரண்டால் வகுத்து, 100க்கு எவ்வளவு; இயற்பியல், வேதியியல் பாடங்களில், 200க்கு எடுக்கும் மதிப்பெண்ணை, நான்கால் வகுத்து, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 50 என, இரு பாடங்களுக்கும் மொத்தம், 100 மதிப்பெண்ணுக்கு, மதிப்பெண்கணக்கிடப்படுகிறது.

பின், மொத்தமாக கணிதத்தில், 100 மதிப்பெண்; இயற்பியல், 50; வேதியியல், 50 என, 200க்கு எவ்வளவு என, 'கட் - ஆப்' கணக்கிடப்படும்.

l சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, கணிதத்தில், 100க்கு எடுக்கும் மதிப்பெண்
அப்படியே எடுத்துக் கொள்ளப் படும். இயற்பியலில், 100; வேதியியலில், 100 மதிப்பெண்ணுக்கு எடுக்கும் மதிப்பெண்ணை, தனித்தனியே, இரண்டால் வகுத்து, 50க்கு எவ்வளவு என, கணக்கிடுவர்.

பின், கணிதத்தில் 100; இயற்பியல், 50; வேதியியல், 50, என, மொத்தம், 200 மதிப்பெண்ணுக்கு 'கட் - ஆப்' கணக்கிடப்படும்.

இத்தகவலை, அண்ணா பல்கலை பேராசிரியர், தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

ரேண்டம் எண், தரவரிசைப் பட்டியல் தயாரிப்பு போன்றவை, அனைத்து சமச்சீர் மற்றும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கும், 'கட் - ஆப்' எண் வரிசைப்படியே தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங்கில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, அண்ணா பல்கலைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28