அயல் நாட்டுப் பேய் பகுதி-4
அயல் நாட்டுப் பேய் பகுதி-4 குறுந்தொடர்- ஆசிரியர் மு.வெ.ரா விடியல் வெளியே வரத்தொடங்கியது . நேற்றிரவு சற்று தூங்குவதற்கு நேரம் ஆனதால் வழக்கம் போல் இல்லாமல் தாமதமாகவே எழுந்தான் சாரா . அன்று ஒரு போராட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான் . இரவில் பசியோடு படுத்ததால் வயிறு வறண்டு இருந்தது . சோறு கஞ்சி மட்டும் சாப்பிடலாம் என்று மாடியிலேயே இருந்த செங்கல்லையும் கொஞ்சம் விறகுகளையும் வைத்து அடுப்பு மூட்டினான் . அரிசி வேகும் முன்னாடியே குளித்து முடித்துவிட்டான் . பெரிய தட்டு ஒன்றை எடுத்து அதுல கொஞ்சம் நெருப்பு அள்ளிப் போட்டு சுருங்கியிருந்த தன் சட்டையை அயன் பண்ணிக்கொண்டான் .இந்த காலத்திலயும் இப்படிச் செய்வதற்கு காரணம் அந்த அவுஸ் ஓனர் தான். கரன்ட் பில் பிரச்சனை. 5 ரூ பான்ட்ஸ் எடுத்து முகத்திலும் சட்டையிலும் பூசிக்கொண்டான் . ஆக்கி வைத்த கஞ்சியை உப்பு போட்டு குடிச்சிட்டு வேக வேகமா புறப்பட்டான் . மார்க்சிம் கார்கி எழுதிய 'தாய்...