மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!!! மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல். மாநிலக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி பாடத்திட்டங்களை மாற்றுவது, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து, தமிழக அரசு தனக்கெனத் தனியாக மாநில கல்விக்கொள்கை-2025-ஐ வடிவமைத்து வெளியிட்டிருந்தது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி தற்போது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. `*உயர் மட்டக்குழு:*` புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்து ஆலோசித்து இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்டக்குழு ...