MENU

Show more

MADRAS EYE TREATMENT

வேகமாக பரவுகிறது மெட்ராஸ் ஐ - உஷார்!!!

தமிழகமெங்கும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்வலி பரவி வருகிறது . 

தமிழகத்தில் தினசரி 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுகிறது. கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டாம் . மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் முறையான மருத்துவரை அணுக வேண்டும் - அமைச்சர் மா.சுப்ரமணியன் . 

விழிப்புணர்வு கண்காட்சி காணொளி


Video courtesy : Polimer news/ YouTube

மெட்ராஸ் ஐ குறித்த முழு விவரம் & சிகிச்சை 

மெட்ராஸ் ஐ" என்பது அதிகமாக பருவ காலங்களில் கண்களில் பரவும் வைரஸ் தொற்று. இது பாக்டீரியா தொற்றாகவும் பரவும். மேலும், சில வைரஸ் தொற்றுகள் சாதாரணமானவையாக இருந்தாலும், சில தொற்றுகள் உங்கள் கண் பார்வையை பறிக்கும் அளவு வீரியம் மிக்கவை என அதிர்ச்சி கொடுக்கிறார் தாம்பரம் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் மற்றும் முதுநிலை கண் நிபுணர் டாக்டர்.ஸ்ரீனிவாசன் ஜி. ராவ் அவர்கள். மேலும் அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை குறித்து இந்த கட்டுரையில் நம்மோடு சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.


மெட்ராஸ் ஐ” யை பொறுத்தவரை வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இது பல விதமான வைரஸ் வடிவில் வரும். இது ஒரு முறை வந்தால் அந்த வருடத்தில் திருப்பி வராது. பொதுவாக 4-7வது நாளில் தான் இதன் அறிகுறி அதிகரிக்கும். பின்பு குறைந்து விடும்.


ஆனால், ஒரு சில வைரஸ் தொற்றுக்கள் கருவிழியை பாதிக்கும். இதை superficial punctate keratitis என்று சொல்வார்கள். அப்போது பத்தாவது நாளில் பார்வை மங்களாகும். இதை பலரும் தனக்கு ரெண்டாவது முறை மெட்ராஸ் ஐ வந்துவிட்டதாக நினைத்து கொள்வார்கள்.


அது தவறு. இது தீவிரமான வைரஸ் தொற்று என்று புரிந்து கொள்ள வேண்டும். அது 2-4 வாரத்தில் சரியாகி விடும். அதே போல், கம்ப்யூட்டரில் வேலை செய்ய கூடாது என்பார்கள். அப்படியில்லை, நீங்கள் வேலை செய்யலாம் ஆனால். சுகாதர வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.


பொதுவாக தொற்று ஏற்பட்டவர்கள் தங்களது கண்களை தொடக்கூடாது என்பதற்காக கண்ணாடி போட சொல்வோம். இது நேருக்கு நேர் பார்ப்பதால் பரவாது. ஆனால், சுத்தமாக இருக்க வேண்டும். குறிப்பாக தொற்று ஏற்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை பயன்படுத்தியதையோ தொடுவதாலோ, அவர் தொட்ட இடங்களில் தொடுவதாலோ இந்த தொற்று பரவலாம்.


எனவே, தான் தொற்று ஏற்பட்டுவரும், அவரை சுற்றி உள்ளவர்களும் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வேறு யாரவது உங்களுக்கு மருந்து போடுகிறார்கள் என்றால் நீங்களும் கை கழுவ வேண்டும், அவர்களும் கழுவ வேண்டும்.

இது பொதுவாக வைரஸ் தொற்று மூலமாக வரும், சில நேரங்களில் பாக்டீரியா தொற்றாகவும் இருக்கலாம். வைரஸ்களில் ஓரிரண்டு வைரஸ்களுக்கு நூறுக்கும் மேற்பட்ட வேறுபாடுகள் உள்ளன.அதில் சிலவைதான் இந்த கருவிழியை பாதிக்க கூடியவை.


அது போன்று வரும்போது 2 இலிருந்து 6, 8 வாரங்கள் கூட கண் மங்கலாக இருக்கும். முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் அதுவாகவே சரியாகி விடும். மழைக்காலம், குளிர்காலம் என பருவகாலங்கள் மாறும்போது இது ஏற்படுகிறது.


கண் சிவப்பாதல்

கண் உறுத்தல் , எரிச்சல்

கண் பூழை கட்டுதல்

கண்ணில் தண்ணீர் வடிதல்

வெளிச்சத்தை பார்க்க சிரமம்

ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். அதுவே தீவிரமான வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு கண்ணில் வீக்கம், பார்வை மங்களாதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.


அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி விட வேண்டும். அவர் கொடுக்கும் மருந்தை உபயோகித்தால் சாதாரண தொற்று என்றால் ஒரு வாரத்திலும், தீவிர வைரஸ் தொற்று என்றால் 2 முதல் 4 வாரத்திலும் சரியாகி விடும். நீங்களாகவே வீட்டு வைத்தியம் செய்தலோ, பிறரின் மருந்தை நீங்கள் பயன்படுத்துவதோ கூடாது.

நன்றி : tamil.samayam.com 


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK